ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.1 கோடி மோசடி தம்பதி உள்பட 3 பேர் கைது


ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.1 கோடி மோசடி தம்பதி உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 April 2018 3:30 AM IST (Updated: 14 April 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.1 கோடி மோசடி செய்ததாக கணவன், மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்,

ராஜபாளையம் ஆவாரம்பட்டி கல்யாணசுந்தரனார் சாலையை சேர்ந்தவர் முத்தையா (வயது 42). இவருடைய மனைவி வனிதா (40). இவர்கள் கிருஷ்ணக்குமாரி (36) என்பவருடன் சேர்ந்து ராஜபாளையம்–தென்காசி ரோட்டிலும், அம்பபுலி பஜாரிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் நெசவாளர் வணிக வளாகத்திலும் நிதிநிறுவனம் நடத்தி வந்தனர். இவர்கள் பல்வேறு திட்டங்களை கூறி பொதுமக்கள் ஆயிரம் பேரிடம் ரூ.1 கோடி வரை முதலீடாக பெற்றுள்ளனர்.

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு அவர்கள் உறுதி அளித்தபடி பணம் அல்லது இடம் கொடுக்காமல் மோசடி செய்ததாககூறப்படுகிறது. இதுகுறித்து ராஜபாளையத்தை சேர்ந்த தண்டாயுதபாணி என்பவர் விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தார்.

அதன்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நிதி நிறுவன பங்குதாரர்களான முத்தையா, அவருடைய மனைவி வனிதா, கிருஷ்ணகுமாரி ஆகிய 3 பேரையும் கைது செய்து காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தவர்கள் விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்யலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story