ராசிபுரம் அருகே வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
ராசிபுரம் அருகே பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம், சீராப்பள்ளி, நாமகிரிபேட்டை, புதுப்பட்டி ஆகிய 4 பேரூராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையொட்டி சீராப்பள்ளி பேரூராட்சி 14-வது வார்டு ஆத்தூர் மெயின் ரோடு பகுதியில் சாலையோரத்தில் உள்ள கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் கீழ் நிலை நீர்தேக்கத்தொட்டியில் நீர் நிரப்பி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் பணிகளை பார்வையிட்டார்.
3-வது வார்டுக்கு உட்பட்ட தேவஸ்தானம்புதூர், ஒடுவன்குறிச்சி சாலை பகுதியில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிப்பதற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட பணியினையும் அவர் பார்வையிட்டார். அதேபோல் நாமகிரிபேட்டை பேரூராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட கொங்காளம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி முதல் விக்கி கல் செல்லும் சாலை வரை நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினையும் கலெக்டர் பார்வையிட்டார்.
பட்டணம் பேரூராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட வடக்கு தெரு பகுதியில் திடக் கழிவு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை வளாகத்தையும், அங்கு மின்சார பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், டயர் உள்ளிட்ட ரப்பர் பொருட்கள் தனித்தனியே பிரித்து வைக்கப்பட்டிருப்பதையும், மக்கும் குப்பை, மக்காத குப்பை நவீன எந்திரம் மூலம் தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கும் பணியினையும் கலெக்டர் ஆசியா மரியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:- பட்டணம் பேரூராட்சியில் உள்ள 2,836 வீடுகளில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை தூய்மை பணியாளர்கள் மூலம் தள்ளுவண்டியில் சேகரிக்கப்பட்டு திடக் கழிவு மேலாண்மை கிடங்கிற்கு கொண்டு வரப்படுகின்றது. மக்காத குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக், இரும்பு, டயர், மின்சாதன பொருட்கள் தனித்தனியே பிரிக்கப்பட்டு சேகரிக்கப்பட்டு உள்ளது.
மக்கும் குப்பைகள் தனியே சேகரிக்கப்பட்டு இயற்கை முறையில் மக்க வைக்கப்படுகின்றது. நல்ல நிலையில் உள்ள குப்பை நுண்ணிய சலிப்பான்கள் மூலம் எந்திரத்தின் கீழே தனியே சேகரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்கப்பட்டு வருகின்றது. இதுவரை 2 டன் குப்பை ரூ.2 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தனியே பிரித்து பேரூராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சீராப்பள்ளி பேரூராட்சியில் 250 வீடுகளும், நாமகிரிபேட்டை பேரூராட்சியில் 577 வீடுகளும், ஆர்.புதுப்பட்டி பேரூராட்சியில் 289 வீடுகளும், பட்டணம் பேரூராட்சியில் 270 வீடுகளும் கட்டப்பட்டு வருகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் முருகன், உதவி செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் சதீஸ்குமார், மல்லிகை சுந்தரம், உமாராணி, கிருஷ்ணவேணி மற்றும் அரசு அலுவலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story