தமிழ் புத்தாண்டையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
தமிழ் புத்தாண்டையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை,
தமிழ் புத்தாண்டையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தமிழ் புத்தாண்டையொட்டி மூலவருக்கு தங்க கவசமும், சம்பந்த விநாயகருக்கு தங்க கவசமும் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
மேலும் அருணாசலேஸ்வரர் கோவில் வழக்கப்படி பால் பெருக்கு நிகழ்ச்சியும், 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு நடப்பு தமிழ் ஆண்டுக்கான பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. கோவில் சிவாச்சாரியார்கள் பஞ்சாங்கத்தை வாசித்து, இந்த ஆண்டுக்கான அருணாசலேஸ்வரர் கோவில் விழா நிகழ்ச்சிகளை அறிவித்தனர்.
தமிழ் புத்தாண்டையொட்டி பக்தர்களின் தரிசனத்துக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். நவக்கிரக சன்னதியில் நெய் தீபம் ஏற்றியும் வழிபட்டனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்ல தொடங்கினர். நேற்று காலையில் திரளான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
மேலும் கிரிவல பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலை கோவிலில் உள்ள லிங்கத்தின் மீது ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை மாதம் 1-ந் தேதி சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி, இந்தாண்டு தமிழ் புத்தாண்டு தினமான நேற்று காலையில் லிங்கத்தின் மீது சூரியஒளி விழும் அதிசய நிகழ்ச்சியை காண அதிகாலையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழுந்ததும் அங்கிருந்த பக்தர்கள் அரோகரா என பக்தி கோஷமிட்டனர். பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Related Tags :
Next Story