3 புதிய பாலங்கள் கட்டும் பணி அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்
வலங்கைமான் அருகே 3 பாலங்கள் கட்டும் பணியை அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்தார்.
வலங்கைமான்,
திருவாரூர்் மாவட்டம் வலங்கைமான் அருகே இனாம்கிளியூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. இனாம்கிளியூரில் குடமுருட்டி ஆறு ஓடுகிறது. இந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு சொந்தமான விளைநிலங்கள் குடமுருட்டி ஆற்றின் மறுகரையில் அதிக அளவு உள்ளன.
இந்த விளைநிலங்களுக்கு செல்ல விவசாயிகள் தஞ்சை மாவட்டம் சுந்தரபெருமாள் கோவில் வழியாகவும், பட்டீஸ்வரம் வழியாகவும் சுற்றி சென்று வருகின்றனர். இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக குடமுருட்டி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதை தொடர்ந்து தமிழக அரசு, இனாம்கிளியூர் அருகே குடமுருட்டி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட ரூ.1 கோடியே 70 லட்சத்து 94 ஆயிரமும், ரெங்கநாதபுரம் அருகே குடமுருட்டி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட ரூ. 1 கோடியே 64 லட்சத்து 36 ஆயிரமும், நடுப்படுகை அருகே முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட ரூ.1 கோடியே 26 லட்சத்து 20 ஆயிரமும் நிதி ஒதுக்கீடு செய்தது.
இந்த நிலையில் 3 புதிய பாலங்கள் கட்டும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்திய நலத்திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் தேவை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திமணி, உதவி கலெக்டர் முத்து மீனாட்சி, திட்ட இயக்குனர் தெய்வநாயகி, செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி இயக்குனர்(ஊராட்சிகள), சந்தானம் உதவி பொறியாளர் மகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story