ராணிப்பேட்டையில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்


ராணிப்பேட்டையில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 15 April 2018 4:15 AM IST (Updated: 15 April 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டையில் தி.மு.க. சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ராணிப்பேட்டை காரை, காட்டன்பஜார், சீனிவாசன்பேட்டை, பிஞ்சி ஆகிய இடங்களில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிஞ்சி ஜெயராம் நகரில் ஆர்.காந்தி எம்.எல்.ஏ. மரக்கன்றுகளை நட்டு வைத்து மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினார்.

விழாவில் வேலூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ உள்பட தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் கட்சி சார்பில், காரையில் நடந்த விழாவுக்கு நகர பொறுப்பாளர் உத்தமன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் மோகன் வரவேற்றார். நகர காங்கிரஸ் தலைவர் வக்கீல் அண்ணாதுரை, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் முன்னாள் நகரசபை உறுப்பினர் இப்ராகிம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ராணிப்பேட்டை முத்துக்கடையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த விழாவுக்கு வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் காரை ஜெய் தலைமை தாங்கி, அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.

மத்திய, மாநில அரசுத்துறை, பொதுத்துறை மற்றும் தனியார்துறை எஸ்.சி., எஸ்.டி. ஊழியர் நலசங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்த விழாவுக்கு அமைப்பின் தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் மலையராஜன் ஆதிதிராவிடன், ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அம்பேத்கர் படத்திற்கும், சிலைக்கும் மாலை அணிவித்தனர்.

அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில், அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான சு.ரவி தலைமை தாங்கினார். அரக்கோணம் ஒன்றிய செயலாளர் பால்ராஜ்சீனிவாசன், நெமிலி ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் துரைகுப்புசாமி வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கோ.அரி எம்.பி. கலந்துகொண்டு, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். இதில் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில், அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கட்சியின் நிறுவன தலைவர் வி.எஸ்.ஐசக்அய்யா தலைமை தாங்கி, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். மாநில இளைஞர் அணி செயலாளர் ராஜன்விண்ணரசு முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் வரவேற்றார்.

விழாவில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வாலாஜாவில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜா ஜே.அசேன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் டி.டி.குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் டாக்டர் லீலாசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பாசறை செயலாளர் டி.டி.சி.சங்கர் வரவேற்றார்.

விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், நகர செயலாளர் எம்.சுந்தரேசன் தலைமையில், மாவட்ட செயலாளர் சாமிகண்ணு, துணை செயலாளர் நந்தி ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பாரதீய ஜனதா கட்சி சார்பில், நகர தலைவர் அன்பழகன் தலைமையில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், ஒன்றிய செயலாளர் சி.செல்வம் தலைமை தாங்கி, மாடப்பள்ளி, குரிசிலாப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

திருப்பத்தூர் ஒன்றிய தி.மு.க. சார்பில், மாடப்பள்ளியில் ஒன்றிய செயலாளர் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்

வாணியம்பாடி கோணாமேடு மற்றும் புதூர் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு காங்கிரஸ் சிறுபான்மைதுறை மாநில தலைவர் அஸ்லம்பாஷா, இலியாஸ்கான், முதசீர்பாஷா, கவியரசன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

நகர அ.தி.மு.க. சார்பில், நகர செயலாளர் சதாசிவம் தலைமையில் கட்சி நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் ஞானசேகரன், பா.ஜ.க. சார்பில் சிவப்பிரகாசம் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பேரணாம்பட்டு நகர அ.தி.மு.க. சார்பில், நகர செயலாளர் எல்.சீனிவாசன் தலைமை தாங்கி, பஸ் நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கனகதாரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற கழகம் சார்பில், நகர செயலாளர் சிவகுமார் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

Next Story