மெஞ்ஞானபுரத்தில் வியாபாரிகள் கடையடைப்பு- சாலைமறியல்
மெஞ்ஞானபுரத்தில் வியாபாரிகள் கடையடைப்பு-சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மெஞ்ஞானபுரம்,
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, மெஞ்ஞானபுரம் பஜாரில் நான்கு சாலைகள் சந்திக்கும் நடுவில் உள்ள மின்கம்பத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கரின் உருவ படம் பொறித்த டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்று கூறி, அப்பகுதி மக்கள், வியாபாரிகள், மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார், சாலையின் நடுவில் இருந்த அம்பேத்கரின் படத்தை எடுத்து, அருகில் சாலையோரமாக வைத்தனர். இதனை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அந்த படத்தை எடுத்து சென்று, மீண்டும் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தில் வைத்தனர்.
பின்னர் போலீசார் மீண்டும் அந்த படத்தை எடுத்து சென்று, சாலையோரமாக வைத்தனர். ஆனாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீண்டும் அம்பேத்கரின் படத்தை எடுத்து சென்று, சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தில் வைத்தனர்.
அங்கு டிஜிட்டல் பேனர் வைத்தால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் வாகன விபத்துகள் நிகழும் என்று கூறி, வியாபாரிகள் மதியம் கடையடைப்பு செய்து, சாலைமறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் அங்கு திரண்டதால் பதற்றம் நிலவியது.
உடனே துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாலச்சந்திரன் (சாத்தான்குளம்), தீபு (திருச்செந்தூர்), சகாய ஜோஸ் (ஸ்ரீவைகுண்டம்) ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்ட வியாபாரிகள் 27 பேரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். அதேபோன்று அங்கு திரண்டு இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 15 பேரை போலீசார் கைது செய்து, மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story