ஆரோக்கியத்தை முறைப்படுத்தும் ‘ஹாரன்’
வாகன பெருக்கத்திற்கு ஏற்ப போக்கு வரத்து நெரிசல் அதிகரித்து கொண்டிருப்பது ஒருபுற மிருக்க, வாகனங்கள் எழுப்பும் ‘ஹாரன்’ சத்தத்தால் ஒலி மாசுபாடு ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசலில் சிக்கும்போதும், சிக்னலில் காத்திருக்கும்போதும், ‘கிரீன் சிக்னல்’ விழுந்த பின்பும் இடைவிடாமல் ஹாரன் எழுப்பும் வாகன ஓட்டிகள் நிறைய பேர் இருக் கிறார்கள்.
அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மும்பையில் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொண்டு நிறுவனம் ஒன்று போக்குவரத்து துறை, ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம், காவல் துறை ஆகியவற்றுடன் இணைந்து ஹாரன் சத்தத்தை குறைப்பதற்கான முயற்சியில் களம் இறங்கி இருக்கிறது.
வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் பூக்களை சரம் சரமாக தொடுப்பதுபோல ஹாரன்களை வரிசையாக ஒரு ஆட்டோவில் அடுக்கி இருக்கிறார்கள். அதில் ‘ஹாரன் அடிக்காதீர்கள்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அத்துடன் ஒரு மணி நேரத்தில் 18 மில்லியன் தடவை ஹாரன்கள் ஒலிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவையில்லாமல் ஹாரன்கள் அடிக்காதீர்கள் என்பதை வேண்டுகோளாக விடுத்து வாகன ஓட்டிகளிடம் துண்டு பிரசுரமாகவும் வழங்கி வருகிறார்கள்.
‘‘தேவையில்லாமல் தொடர்ச்சியாக ஹாரன்கள் அடித்து கொண்டிருப்பது ஒலி மாசுபாடுக்கு காரணமாகிறது. ஹாரன்களில் இருந்து வெளிப்படும் இரைச்சல் கோபத்தை அதிகரிக்க செய்கிறது. மன அழுத்தம், மனச்சோர்வு, உயர் ரத்த அழுத்தம், காது கேளாமை போன்ற பிரச்சினைகள் ஏற்படவும் வழிவகுக்கிறது. 70 சதவீதம் ஒலி மாசுபாட்டுக்கு ஹாரன்கள் எழுப்பும் ஓசை காரணமாக இருக்கிறது. ஹாரன் அடிப்பதை குறைத் தால் தனிமனித ஆரோக்கியம் பெருகும்’’ என்கிறார்கள், டாக்டர்கள்.

Related Tags :
Next Story