மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு வாழை தோட்டத்து மின்வேலி மீது கால்தவறி விழுந்ததால் பரிதாபம்
பூதப்பாண்டி அருகே வாழை தோட்டத்து மின்வேலி மீது கால்தவறி விழுந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.
பூதப்பாண்டி,
பூதப்பாண்டி அருகே தெரிசனங்கோப்பை அடுத்த இந்திராகாலனியை சேர்ந்தவர் தர்மர் (வயது 37), செங்கல்சூளை தொழிலாளி. இவருக்கு வினிதா (32) என்ற மனைவியும், 2 மகனும், 2 மகள்களும் உள்ளனர். இவர்களது வீட்டின் அருகே கருங்கல் பகுதியை சேர்ந்த ஒருவர் வாழை தோட்டம் அமைத்துள்ளார். தோட்டத்தில் காட்டு விலங்குகள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தாமல் இருக்க சுற்றிலும் மின்வேலி அமைத்திருந்தார்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தர்மர் இயற்கை உபாதை கழிப்பதற்காக வாழை தோட்டத்துக்கு சென்றார். அவர் வேலியில் மின்சாரம் பாய்ச்சியிருப்பது தெரியாமல் அதன் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக கால்தவறி மின்வேலி மீது விழுந்தார். இதனால், அவர் மீது மின்சாரம் பாய்ந்து, உடல் கருகிய நிலையில் அலறி துடித்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த மனைவி வினிதா ஓடி சென்றார். அதற்குள் தர்மர் பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடினர். அவர்கள் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்துக்கும், அழகியபாண்டியபுரம் மின்சாரதுறை அலுவலகத்துக்கும் தகவல் கொடுத்தனர். மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மின் இணைப்பை துண்டித்தனர். அதன்பின்பு, தர்மரின் உடலை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆரல்வாய்மொழி அருகே அனந்தபத்மநாபபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமி (59). இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று தனக்கு சொந்தமான ஒரு பசுமாட்டை தில்லாண்டி ஊற்று வயல்பகுதியில் மேய்ப்பதற்காக கொண்டு சென்றார்.
அந்த வயல்பகுதியில் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்தது. லட்சுமி மாட்டை மேய விட்டு விட்டு ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது, மாடு அறுந்து கிடந்த மின்கம்பி மீது மிதித்தது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மாடு பரிதாபமாக செத்தது.
இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மின்கம்பி அறுந்து விழுந்து 2 மாடு, 2 ஆடுகள் செத்தன. தற்போது மீண்டும் பசுமாடு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story