மத்தியஅரசை கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் அய்யாக்கண்ணு பேட்டி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்தியஅரசை கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் 18-ந் தேதி முதல் போராட்டம் நடத்த உள்ளோம் என்று அய்யாக்கண்ணு கூறினார்.
தஞ்சாவூர்,
தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் பிரதமர் மோடி தமிழக விவசாயிகளை ஏமாற்றி வருகிறார். ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் எரிவாயு திட்டத்தை செயல்படுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் முயற்சியில் மத்தியஅரசு ஈடுபட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க 90 நாட்கள் மத்தியஅரசு அவகாசம் கேட்பதை போல நாங்கள் போராடுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்.
சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தினால் நாங்கள் எதற்காக போராட போகிறோம். போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கலாம் என அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்தியஅரசை கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி கொடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருக்கிறோம். இதற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழகஅரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாங்கள் எங்களது உடம்பை வருத்திக் கொண்டு காந்திய வழியில் தான் போராட்டம் நடத்துகிறோம். வருகிற 18-ந் தேதி முதல் இரவு, பகல் என தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த இருக்கிறோம். அதற்கு ஐகோர்ட்டு அனுமதி வழங்கும் என்று நம்புகிறோம். டெல்லியிலும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். தினமும் ஒவ்வொருவராக இறந்தாலும் சரி டெல்லியில் இருந்து திரும்பி வரமாட்டோம்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை கொண்டு உணவு பொருட்களை உற்பத்தி செய்வதால் அதிக மகசூல் கிடைக்கும். ஆனால் அந்த உணவு பொருட்களை சாப்பிடும் ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படும். பெண்கள் கருத்தரிக்கும் சக்தியை இழந்துவிடுவார்கள். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story