காலிக்குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கபிஸ்தலத்தில் காலிக்குடங்களுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கபிஸ்தலம்,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கபிஸ்தலம் அருகே ஆதனூரில் கிராம மக்கள் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ராமலிங்கம், சமூக ஆர்வலர்கள் பாலகிருஷ்ணன், மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கோவிந்தராஜ், நடராஜன், மாதவன், நாராயணமூர்த்தி, கலையரசன் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வேளாண்மை மண்டலம்
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும், மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை காவிரி டெல்டா பகுதியில் அமல்படுத்த கூடாது என போராட்டத்தின்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Tags :
Next Story