மதுராந்தகம் அருகே கார் இருக்கை தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து
மதுராந்தகம் அருகே கார் இருக்கை தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது.
மதுராந்தகம்,
மதுராந்தகம் அருகே உள்ள சாத்தமை கிராமத்தில் கார் இருக்கை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு தயார் செய்யப்படும் கார் இருக்கைகள் உள்நாடு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இங்குள்ள கழிவு பொருட்களை தொழிற்சாலைக்குள் ஒரு பகுதியில் கொட்டி வைத்திருந்தனர். இங்கு நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்தது.
இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. புகைமூட்டத்தால் தொழிற்சாலையை சுற்றி வசித்து வந்த பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.
இது குறித்து தகவல் அறிந்த மதுராந்தகம், அச்சரப்பாக்கம், செங்கல்பட்டு தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
அவர்கள் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக தொழிற்சாலையை சுற்றியுள்ள பொதுமக்கள் மதுராந்தம் போலீசில் புகார் செய்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story