சென்னை கோட்டை ரெயில் நிலையம் அருகே ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் 3 வீடுகளில் துணிகர கொள்ளை
சென்னை கோட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் புகுந்த கொள்ளையர்கள் 3 வீடுகளின் பூட்டை உடைத்து பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
சென்னை,
சென்னை கோட்டை ரெயில் நிலையம் அருகே ராணுவ அதிகாரி குடியிருப்பு உள்ளது. இங்கு எப்போதும் பாதுகாப்பு பலமாக இருக்கும். வெளியாட்கள் யாரும் இங்கு எளிதில் நுழைந்துவிட முடியாது. பாதுகாப்பு அரணாக இருக்கும் இந்த குடியிருப்பு பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவு கொள்ளையர்கள் புகுந்துவிட்டனர்.
அகிலேஷ்குமார், செந்தில்குமார், சர்க்கிஷ்ஜி ஆகிய 3 ராணுவ வீரர்கள் அங்கு அடுத்தடுத்து வீடுகளில் வசித்து வந்தனர். அவர்கள் 3 பேரும் வீடுகளை பூட்டிவிட்டு பயிற்சிக்காக வெளி மாநிலத்திற்கு சென்றுவிட்டனர். அவர்கள் தங்கள் குடும்பத்தினரையும் அழைத்துச் சென்றுள்ளனர்.
ராணுவ அதிகாரிகளின் குடியிருப்பில் புகுந்த கொள்ளையர்கள் இந்த 3 பேர்களின் வீடுகளின் பூட்டுகளை உடைத்துள்ளனர். வீடுகளுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பொருட்களை அள்ளிச் சென்றுள்ளனர். நகை-பணம் போன்றவைகள் கொள்ளைபோனதா? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.
இதுபற்றி பயிற்சியில் இருக்கும் ராணுவ வீரர்கள் 3 பேருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்தபிறகுதான் என்னென்ன பொருட்கள் கொள்ளை போனது? என்ற விவரம் தெரியவரும். இதுதொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த வீடுகளுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்களும் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்துள்ளனர்.

Related Tags :
Next Story