இரு தரப்பினர் மோதல்; கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன 40 பேர் கைது
வந்தவாசி அருகே மாணவியை கிண்டல் செய்தது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதுதொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
வந்தவாசி,
வந்தவாசி தாலுகா தெள்ளாரை சேர்ந்த மாணவி ஒருவர் தனது நிலத்திற்கு சென்று விட்டு அங்குள்ள ஒரு பகுதி வழியாக நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் மாணவியை கேலியும், கிண்டலும் செய்துள்ளனர்.
இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெள்ளார் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் விசாரணையின் போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே தெள்ளார் அம்பேத்கர் சிலை அருகில் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் சோடா பாட்டில், கற்கள் போன்றவற்றால் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் 3 டீக்கடைகள், 2 பெட்டிக்கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் காயம் அடைந்த இருதரப்பையும் சேர்ந்த கார்த்திகேயன், கவியரசு ஆகியோர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
மேலும் தகராறை தடுக்க முயன்ற தெள்ளார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம், சிறப்பு பிரிவு போலீசார் சுரேஷ், யோகானந்தம் ஆகியோர் மீது கல் விழுந்ததில் அவர்களுக்கும் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மு.குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருதரப்பினரையும் விரட்டி அடித்தனர்.
இதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள் குணசேகரன், (மதுவிலக்கு பிரிவு) ஸ்ரீதர், செந்தில் ஆகியோர் மேற்பார்வையில் அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி நள்ளிரவு தெள்ளார் பகுதிக்கு விரைந்து வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு, மோதல் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார்.
இந்த மோதல் குறித்து இருதரப்பையும் சேர்ந்த 4 பேர் தனித்தனியாக போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் இரு தரப்பையும் சேர்ந்த 73 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, 40 பேரை கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Tags :
Next Story