சிறுமி ஆஷிபா படுகொலை வழக்கில் நீதி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
சிறுமி ஆஷிபா கொலை வழக்கில் உரிய நீதி வழங்கக்கோரி கிருஷ்ணகிரி, ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், காஷ்மீரில் சிறுமி ஆஷிபா படுகொலைக்கு உரிய நீதி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுல்தான் தலைமை தாங்கினார். நகர தலைவர் பைரோஸ், நகர துணை செயலாளர் அம்ஜத், முன்னாள் நகர தலைவர் அம்ஜத், முன்னாள் நகர செயலாளர் தாஜீத்தீன், முன்னாள் நகர பொருளாளர் ஜியா, முன்னாள் தொழிலாளர் அணி நிர்வாகி கலந்தர், நகர மருத்துவரணி செயலாளர் சைப்கான், மனித நேய மக்கள் கட்சி நகர பொருளாளர் அப்சல்கான், நகர துணை செயலாளர் அம்ஜத், நகர செயலாளர் ஆரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாநில துணை செயலாளர் திருப்பத்தூர் சனாவுல்லா கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சிறுமி ஆஷிபா படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தும், கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு உரிய நீதி வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சியின் மாநில ஊடகப்பிரிவு பொருளாளர் அல்தாப்அகமத், முன்னாள் மாவட்ட தலைவர் நூர்முகமத், மாவட்ட செயலாளர் வாஹித்பாஷா, மாவட்ட துணை செயலாளர் ரிஸ்வான், மாவட்ட பொருளாளர் ஜாவீத், மாவட்ட துணை செயலாளர் மக்பூல்அகமத், மாவட்ட துணை செயலாளர் யாசின், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரியாஸ்அகமத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் தமிழ் தேசிய குடியரசு இயக்கம் மற்றும் தமிழக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில், சிறுமி ஆஷிபாவுக்கு உரிய நீதி வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். ராமமூர்த்தி வரவேற்றார். இதில், திராவிடர் கழக மாவட்ட இணை செயலாளர் வனவேந்தன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயலாளர் ஷாநவாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஓசூர் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில இணை செயலாளர் இம்தியாஸ் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். முடிவில், கோபி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story