சீர்மரபினர் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும், தமிழக அரசுக்கு கோரிக்கை


சீர்மரபினர் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும், தமிழக அரசுக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 16 April 2018 10:15 PM GMT (Updated: 16 April 2018 7:48 PM GMT)

மூடப்பட்டுள்ள சீர்மரபினர் பள்ளிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீர்மரபினர் நல கூட்டமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

விருதுநகர்,

சீர்மரபினர் நல கூட்டமைப்பினர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

1970-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சட்டநாதன் கமிஷன்படி மறவர் சீரமைப்பு கழகம், வலையர் சீரமைப்பு கழகம் உருவாக்க வேண்டும். 1970-ம் ஆண்டு போடப்பட்ட டி.என்.சி. அரசு உத்தரவை ரத்து செய்து டி.என்.டி.யாக மாற்றித்தர வேண்டும். மூடப்பட்டுள்ள சீர்மரபினர் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும். சீர்மரபினர் விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

இன்றைய அடிப்படை கல்வி நிலையை கருதி மாவட்டத்தில் யூனியன் தோறும் ஆங்கில வழி நர்சரி பள்ளிகளை திறக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் உள்ள சீர்மரபினர் மக்களுக்கான சலுகைகளை போல விருது நகர் மாவட்டத்திலும் வழங்க வேண்டும். சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினர்களை சேர்க்க தாலுகா தோறும் அரசு முகாம் அமைக்க வேண்டும். சீர்மரபினர் நல வாரியத்தில் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். மேற்கண்டவாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்மரபினர் நலகூட்டமைப்பின் சார்பில் பொதுச்செயலாளர் மாரிமுத்து, அனைத்து மறவர்கள் கூட்டமைப்பு செயலாளர் புணுகு நடராஜன், இளைஞர் அணி செயலாளர் திருப்பதிபாண்டியன் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Next Story