அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன் பேட்டி


அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 17 April 2018 4:30 AM IST (Updated: 17 April 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் பேட்டி அளித்துள்ளார்.

அவனியாபுரம்,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நேற்று மதுரையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் சரியான பாதையில் செல்கிறது. முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் யாருக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ கருத்து கூறவில்லை. முதல்-அமைச்சர் எதற்காக பயப்படுகிறார். ஜெயக்குமார் ஏன் கைது மிரட்டல் விடுகிறார். ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது நடந்ததாக கூறப்படும் காவிரி ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டது உண்மை என தெரியவருகிறது. அவருக்கு கால் இல்லை, கை இல்லை என கூறுவது பொய் என தெரியவந்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் முடிவு செய்து ஜெயலலிதாவை சிகிச்சைக்கு வெளிநாடு அனுப்பி இருக்க வேண்டும். தனிப்பட்ட நபர் அவரின் சிகிச்சை குறித்து முடிவு செய்ய முடியாது. 18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு இன்னும் ஒரு மாதத்தில் வெளிவரும். அப்போது ஆட்சி கலைந்து விடும். அப்போது சிலிப்பர் செல்கள் வெளிவந்து ஆட்சி கவிழும்.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மீதான வழக்கு விசாரணையை சி.பி.ஐ. நடத்த வேண்டும். நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் நடந்தால் தான் அதிகாரிகள் மீதான விசாரணை நேர்மையாக நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story