பாதுகாப்பு வழங்கக்கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கிராமமக்கள் தர்ணா போராட்டம்
மங்கலம் கொட்டாய் கிராமமக்கள் பாதுகாப்பு வழங்கக்கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் வே.முத்தம்பட்டி அருகே உள்ள மங்கலம்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் எங்கள் உயிருக்கும், உடமைகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன்பகுதியை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அப்போது அவர் உறுதியளித்தார்.
அப்போது தர்ணாவில் ஈடுபட்டவர்கள் அளித்த கோரிக்கை மனுவில், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த எங்கள் மீது பல்வேறு விதமான அடக்குமுறைகள் நிகழ்த்தப்படுகின்றன. இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை எங்கள் பகுதியில் கொண்டாடியபோது ஏற்பட்ட தகராறில் எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டனர். இதை தடுக்க வந்த போலீசாரில் சிலரும் தாக்கப்பட்டனர். இதனால் எங்கள் உயிருக்கும், உடமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், நாங்கள் வசிக்கும் பகுதியில் இயல்பான சூழ்நிலையை ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டம் நடத்தப்போவதாக கூறி சுமார் 1 மணி நேரம் அந்த பகுதியில் அமர்ந்திருந்தனர். இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போராட்டம் நடத்தியவர்களில் சிலருக்கும், சில போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு காந்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோரிக்கை தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை நேரில் சந்தித்து பேசுமாறு அவர் அறிவுறுத்தினார்.
இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதரை சந்தித்த அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். இந்த போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story