தடுப்பணை கட்டுவது குறித்து உப்பனாற்றில் படகில் சென்று அதிகாரிகள் ஆய்வு
சீர்காழி அருகே உப்பனாற்றில் தடுப்பணை கட்டுவது குறித்து அதிகாரிகள் படகில் சென்று ஆய்வு செய்தனர்.
திருவெண்காடு,
நாகை மாவட்டம் திருவெண்காடு அருகே திருமுல்லைவாசலில் கடல் முகத்துவாரம் உள்ளது. இதில் இருந்து கடல்நீர் உப்பனாற்றில் உட்புகுவதால் திருநகரி, புதுத்துறை, திருவாலி, சூரக்காடு, சட்டநாதபுரம், பனமங்கலம், துறையூர், சீர்காழி, வெள்ளப்பள்ளம், கீராநல்லூர், எடமணல், வழுதலைகுடி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடிநீர் உப்புநீராக மாறி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாகுபடி செய்ய முடியாமல் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தரிசு நிலங்களாக மாறி உள்ளது.
மேலும், உப்புநீராக மாறிவிட்டதால் பொதுமக்கள் குடிநீருக்காக பக்கத்து கிராமங்களுக்கு செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடல்நீர் உட்புகுவதை தடுக்கும் வகையில் உப்பனாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திருநகரி தோணித்துறை உப்பனாற்றில் தடுப்பணை கட்டுவதற்கு ரூ.15 கோடி திட்ட மதிப்பீடு தாயார் செய்யப்பட்டு வருகிறது.
படகில் சென்று ஆய்வு
இதையொட்டி தஞ்சை திட்டம் மற்றும் வடிவமைப்பு உதவி செயற்பொறியாளர் பரஞ்ஜோதி, கும்பகோணம் திட்டம் மற்றும் வடிவமைப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர்கள் மாலா, ஜெயலட்சுமி, கலாராணி, உதவி பொறியாளர் மகேஷ்குமார் ஆகியோர் திருநகரி தோணித்துறை பகுதியில் உப்பனாற்றில் படகில் சென்று தடுப்பணை கட்டுவது குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது ஆற்றின் அகலத்தை அளந்து, திருவாலி ஏரியில் இருந்து வேதராஜபுரம், திருநகரி தோணித்துறை வரை நீர் மட்டத்தின் அளவை கணக்கிட்டு சென்றனர். ஆய்வின்போது தடுப்பணைகுழு ஒருங்கிணைப்பாளர்கள் ஜெகசண்முகம், கோபாலகிருஷ்ணன், அருமையப்பன், அம்சநாதன், மோகன்தாஸ், அரங்கநாதன், ராஜா, ஜமீன், கார்த்திக், தினேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story