உப்பள தொழிலாளர்கள் போராட்டம்
தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.600 சம்பளம் வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று உப்பள தொழிலாளர்கள் திரளாக வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு உப்பு தொழிலாளர் சங்க தலைவர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ஞானதுரை, பொருளாளர் மணவாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், உப்பள தொழிலாளர்களுக்கு கேரள மாநிலத்தை போல் நாள் ஒன்றுக்கு ரூ.600 சம்பளம் வழங்க வேண்டும், மழை காலங்களில் வேலையில்லாத நாட்களுக்கு தேர்தல்கால வாக்குறுதிபடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும். தொழிலாளர் நல,தொழிற்சாலை சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். அதன் பின்னர் அவர்கள், கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story