நெல்லை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
நெல்லை மாவட்டத்தில் 1,016 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.68½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.
நெல்லை,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஊனமுற்றோருக்கான தேசிய நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்தது.
கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. முன்னிலை வகித்தார். அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 1,016 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.68 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பிலான உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
இதைத்தொடர்ந்து கலைபண்பாட்டுத் துறையின் சார்பில் 2016-17 ஆம் ஆண்டுக்கு மாவட்ட அளவில் அகவை மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த 10 கலைஞர்களுக்கு கலை இளமணி, கலை வளர்மணி, கலைச்சுடர்மணி, கலைநன்மணி மற்றும் கலைமுதுமணி ஆகிய விருதுகளையும் அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.
விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாந்தி குளோரி எமரால்டு, மறுவாழ்வு அலுவலர் குருமூர்த்தி, கலை பண்பாட்டுதுறை உதவி இயக்குநர் சுந்தர், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதாபரமசிவம், நெல்லை மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பரணிசங்கரலிங்கம், பொருளாளர் தச்சை கணேசராஜா, சங்கரன்கோவில் நகரசபை முன்னாள் துணைத்தலைவர் கண்ணன், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாராயணபெருமாள், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சேர்மபாண்டி, சிறுபான்மை பிரிவு செயலாளர்கள் கபிரியேல் ஜெபராஜன், தாசில்தார் கந்தசாமி, புதுக்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முத்துக்குட்டி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story