காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இன்று உண்ணாவிரதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, என்.ஆர் காங்கிரஸ் சார்பில், காரைக்காலில் இன்று ரங்கசாமி தலைமையில் உண்ணாவிரத போராாட்டம் நடைபெறுகிறது.
காரைக்கால்,
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பாலன் நேற்று காரைக்காலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவையில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், காரைக்காலுக்கான 7 டி.எம்.சி. தண்ணீரை உறுதி செய்ய வலியுறுத்தியும், காரைக்காலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் இன்று (புதன்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. காரைக்கால் பஸ்நிலையம் அருகே உள்ள பழைய ரெயில்வே நிலையம் அருகே நடைபெறும் இந்த போராட்டத்துக்கு முன்னாள் முதல்-அமைச்சரும், என்.ஆர் காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி தலைமை தாங்குகிறார்.
உண்ணாவிரதத்தில் முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.கள் கலந்துகொள்கிறார்கள். எனவே பொதுமக்களும் இதில் கலந்துகொண்டு ஆதரவு தரவேண்டுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story