காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஜனாதிபதிக்கு தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஜனாதிபதிக்கு தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் தி.மு.க. சார்பில் நேற்று நடந்தது.
தஞ்சாவூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஜனாதி பதிக்கு தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் து.செல்வம், மாவட்ட நிர்வாகிகள் லண்டன்கோவிந்தராஜ், புண்ணியமூர்த்தி, பாக்கியவதி, எல்.ஜி.அண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டு தபால் அட்டைகளை ஜனாதிபதிக்கு அனுப்பினர். அதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை தாங்கள் அறிவீர்கள். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமும், குடிநீர் ஆதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
பின்னர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. கூறுகையில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சி முக்கொம்பில் இருந்து கடலூர்வரை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டார். அப்போது விவசாயிகள், பொதுமக்களிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தபால் அட்டைகளில் பொதுமக்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டன. அவ்வாறு கையெழுத்து பெறப்பட்ட 7 ஆயிரம் தபால் அட்டைகள் முதல் கட்டமாக அனுப்பப்பட்டுள்ளன. தொடர்ந்து தபால் அட்டைகள் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும்”என்றார்.
இதில் நகர செயலாளர் நீலமேகம், ஒன்றிய செயலாளர்கள் முரளிதரன், செல்வராஜ், பார்த்தீபன், பட்டுக்கோட்டை நகர செயலாளர் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் முரசொலி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன், மருத்துவர் அணி அமைப்பாளர் அஞ்சுகம்பூபதி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கமலரவி, மாணவரணி செந்தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story