சொத்து தகராறில் விவசாயி வெட்டிக்கொலை மகன் கைது
கறம்பக்குடி அருகே சொத்து தகராறில் விவசாயியை வெட்டிக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள குளந்திரான்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கந்தையா (வயது 65). விவசாயி. இவருக்கு சித்திரைக்குமார் (38), பசுபதி (35) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கந்தையா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஊர்பிரமுகர்கள் முன்னிலையில் தனது சொத்தை 2 மகன்களுக்கும் பாகப்பிரிவினை செய்து கொடுத்தார்.
அதில் மூத்தமகன் சித்திரைக்குமாருக்கு ஒரு வீட்டு மனையை கூடுதலாக கொடுத்து, அதற்கு ஈடாக சித்திரைக்குமார், பசுபதிக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும் என பேசி முடிவெடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சித்திரைக்குமார், தனது தம்பி பசுபதிக்கு பணம் எதுவும் கொடுக்கவில்லை. இதனால் அண்ணன், தம்பிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
தந்தை கொலை
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கந்தையாவிடம், அவரது மகன் பசுபதி தனக்கு பாகப்பிரிவினை சரியாக பிரித்து கொடுக்கவில்லை என கூறி தகராறில் ஈடுபட்டார். அப்போது ஊர்பிரமுகர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் கந்தையா அவரது வீட்டிற்கு சென்று வாசலில் கட்டிலில் படுத்து தூங்கினார். அப்போது அரிவாளுடன் ஆவேசமாக வந்த பசுபதி, கட்டிலில் தூங்கி கொண்டிருந்த கந்தையாவை தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த கந்தையா சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து பசுபதி அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதைக்கண்ட அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கந்தையாவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறிது நேரத்தில் கந்தையா பரிதாபமாக இறந்தார்.
மகன் கைது
இந்த சம்பவம் குறித்து கந்தையாவின் மனைவி பாப்பா கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி வழக்குபதிந்து, பசுபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். சொத்து தகராறில் விவசாயியை மகனே வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story