பா.ஜனதா சார்பில் வேட்பாளர்கள் அறிவிப்பு தொண்டர்கள் 2 பேர் தற்கொலை முயற்சி
பா.ஜனதா சார்பில் வேட்பாளர்கள் அறிவிப்பு எதிரொலியால் தொண்டர்கள் 2 பேர் தற்கொலை முயன்றனர்.
பெங்களூரு,
பா.ஜனதா சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தொண்டர்கள் 2 பேர் நேற்று தற்கொலைக்கு முயன்றனர். துமகூரு அருகே கட்சி அலுவலகம் சேதப்படுத்தப்பட்டது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களின் பெயர்கள் 154 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளன. இன்னும் 70 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். இந்த நிலையில், பல்வேறு தொகுதிகளில் பா.ஜனதா கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தொகுதியில் பா.ஜனதா சார்பில் ஸ்ரீகாந்த் குல்கர்னி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் சங்கமேஸ் நிரானி என்பவரின் ஆதரவாளர்கள் நேற்று ஜமகண்டி தேசாய் சர்க்கிளில் பா.ஜனதா மேலிடத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பா.ஜனதா கட்சியின் தொண்டரும், சங்கமேஸ் நிரானியின் ஆதரவாளருமான சிரிகண்ணவர் என்பவர் அருகே உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏறி நின்று கீழே குதித்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார். மேலும், அவர் கட்டிடத்தில் இருந்து கீழே குதிக்க முயன்றார். அப்போது, அங்கு வந்த போலீசார் உடனடியாக அவரை மீட்டனர். இதேபோல், சங்கமேஸ் நிரானியின் இன்னொரு ஆதரவாளர் ஒருவரும் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைக்க முயன்றார். அவரையும் மற்றவர்கள் காப்பாற்றினார்கள்.
இதேபோல், துமகூரு மாவட்டம் பாவகடா தொகுதியில் பா.ஜனதா சார்பில் களம் இறங்கும் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த தொகுதியில் போட்டியிட பா.ஜனதா சார்பில் ஹனுமந்தய்யா, கிருஷ்ணா நாயக், பலராம் ஆகியோர் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த நிலையில், பாவகடா தொகுதியில் அவர்கள் 3 பேரை தவிர்த்து இன்னொருவருக்கு டிக்கெட் கொடுக்கப்பட உள்ளதாக நேற்று அங்கு தகவல் பரவியது.
இதனால், அவர்கள் 3 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே, அவர்களின் ஆதரவாளர்கள் பாவகடாவில் உள்ள பா.ஜனதா அலுவலகத்துக்குள் நுழைந்து அங்குள்ள மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் அவர்கள் அனைவரையும் வெளியேற்றினார்கள். இந்த 2 சம்பவங்கள் நேற்று அந்தந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

Related Tags :
Next Story