காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு காங்கிரஸ், பா.ஜ.க.வே காரணம் - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு காங்கிரஸ், பா.ஜ.க.வே காரணம் என்று ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே சென்னை தென்மண்டல அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி ரெயில்வே தொழிற்சங்கம் சார்பில் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அகில இந்திய எஸ்.சி, எஸ்.டி ரெயில்வே தொழிற்சங்கத்தின் சென்னை தென்மண்டல பொதுச்செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார்.
தென்மண்டல தலைவர் தங்கராஜ், நிர்வாக தலைவர் ராகுல்ஆனந்த், பொருளாளர் தியாகு, டிவிசன் செயலாளர் மேனகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டு மக்கள் சட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு அடித்தளம் அமைத்தவர் டாக்டர் அம்பேத்கர்தான். காரணம், சமுதாயத்தில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இருக்கக்கூடாது என்பதற்காக அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் உயரவேண்டும் என்று இறுதி மூச்சுவரை பாடுபட்டவர் அம்பேத்கர்.
மத்திய மாநில அரசுகள் அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கக்கூடிய நல்வாழ்வு பணிகளையும், முன்னேற்றத்திற்கு கொடுக்கக்கூடிய நல திட்டங்களை தொடர்ந்து கொடுக்க வேண்டும், குறிப்பாக அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீட்டை முறையாக, சரியாக மத்திய அரசு செயல்படுத்தி அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். குற்றங்களை குறைக்கவும், தடுக்கவும் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும்.
அப்போது தான் நம் நாட்டில் குற்றச்செயல்கள் குறையும். காஷ்மீரில் ஒரு சிறுமியை பாலியல் கொடுமை செய்துள்ளனர். அதை செய்தவருக்கு விசாரணை இல்லாமல் தூக்குத்தண்டனை வழங்க வேண்டும்.
அதேபோல அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி பேராசிரியை மாணவிகளுக்கு தொலைபேசியில் பாலியல் ரீதியாக பேசியது கல்வித்துறை மீது பொதுமக்களுக்கும், பெற்றோருக்கும் நம்பிக்கையில்லாமல் போய்விடும் நிலை உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக விசாரணை செய்து தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் சரி, அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.
அவர்களுக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். தமிழகத்தில் தற்போது காவிரி பிரச்சினை என்பது மிக முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது.
பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் திட்டமிட்டு கர்நாடக மாநில தேர்தல் முடியும் வரை தமிழகத்திற்கு தண்ணீர் தரமாட்டோம் என கூறுவது ஒரு போதும் ஏற்புடையது அல்ல. இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் இந்தியாவில் அனைத்து பிரச்சினைகளிலும் எதிரும் புதிருமாக இருக்கிற தேசிய கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க.வும் காவிரி பிரச்சினை என்று வந்துவிட்டால் ஒத்த கருத்தோடு தமிழக மக்களை வஞ்சிக்கிறார்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நான் குற்றம் சாட்டுகிறேன்.
தேசிய கட்சிகளின் தலையீட்டின் காரணமாகவே நமக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாத சூழல் உள்ளது. இதற்கு காங்கிரஸ், பா.ஜ.க.வே காரணம். மேலும் அடித்தட்டு மக்களின் நலனிற்காக தொடர்ந்து தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி போராடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story