தமிழர்களின் கட்டிடக்கலை சிறப்பை உலகமே வியந்து பார்க்கிறது அதிகாரி பேச்சு
தமிழர்களின் கட்டிடக்கலை சிறப்பை உலகமே வியந்து பார்க்கிறது என்று இந்திய தொல்லியல் துறை வேதியியல் வல்லுனர் சந்திரபாண்டியன் கூறினார்.
தஞ்சாவூர்,
உலக பராம்பரிய தினத்தை முன்னிட்டு இந்திய தொல்லியல் துறை சார்பில் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டுகளை மாணவர்களுக்கு படித்துகாட்டுவது, உலக பராம்பரிய விழிப்புணர்வு பேரணி ஆகியவை நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு இந்திய தொல்லியல்துறை சென்னை வட்ட வேதியியல் வல்லுனர் சந்திரபாண்டியன் தலைமை தாங்கினார். தஞ்சை பெரிய கோவிலை சுற்றியுள்ள கல்வெட்டுகளை மாணவர்களிடம் எடுத்து கூறினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
சோழ மண்டலத்தில் அமைந்துள்ள தஞ்சை பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் ஆகிய 3 உலக பராம்பரிய சின்னங்கள் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. தமிழர்களின் கட்டிடக்கலை சிறப்பை உலகமே இன்றும் வியந்து பார்க்கிறது.
சிமெண்டு இல்லாமல் கற்களால் இப்படி ஒரு கட்டிடங்களை சோழ மன்னர்கள் எழுப்பியுள்ளார்கள். தஞ்சை பெரிய கோவிலை சுற்றி 150-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. அதேபோல் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ஓவியம் மோனோலிசா ஓவியத்தை விட சிறப்பாக உள்ளது.
ஆனால் நாம் வெளிநாட்டு மோகத்தில் மூழ்கி இருப்பதால் மோனோலிசா ஓவியத்தை பேசிவருகிறோம். முதலில் நாம், வெளிநாட்டு மோகத்தில இருந்து மீண்டு வரவேண்டும். தாய்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். இதன்பின்னர் மற்ற மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும்.
நமது நாட்டில் 1 லட்சம் கல்வெட்டுகள் உள்ளன. இதில் தமிழகத்தில் தான் அதிக அளவில் 60 ஆயிரம் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அதிலும் மிக நீளமான கல்வெட்டு தமிழகத்தில் இருந்து தான் கிடைத்துள்ளது. அதே போல் தஞ்சைக்கு அருகே உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் பிராமி மொழி கல்வெட்டு முதன் முதலில் கிடைத்தது. குடைவரை கோவில்கள் அதிகம் இங்கு தான் உள்ளது. சித்தன்னவாசல் பகுதியில் சமணர் படுகை உள்ளது. இவ்வாறு பாரம்பரியங்கள் நம்மை சுற்றியே உள்ளது. இதையெல்லாம் நாம் பாதுகாக்க வேண்டும்.
உலக பாரம்பரிய சின்னங்கள் அமைந்துள்ள இடங்களில் சென்று அங்குள்ள ஓவியங்களை சிதைக்கும் வகையில் நமது பெயர்களை எழுதுவதை தவிர்க்க வேண்டும். கல்வெட்டுகளின் மேல் நமது படம் வரைவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. உலக பாரம்பரிய சின்னங்களை பாதுகாத்து வருங்கால தலைமுறையினருக்கு விட்டுச்செல்ல வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இதில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக பேராசிரியர் ராஜவேல், அரசினர் தொழிற்பயிற்சி மைய உடற்கல்வி ஆசிரியர் அனந்த செல்வம், தொல்லியல் துறை தோட்டக்கலை ஆய்வாளர் முத்துக்குமார், தொல்லியல் துறை முதுநிலை பராமரிப்பு உதவியாளர் சந்திரசேகரன் மற்றும் பலர் பேசினர். முன்னதாக முதுநிலை பராமரிப்பு அலுவலர் சந்திரசேகரன் வரவேற்றார். முடிவில் முதுநிலை பராமரிப்பு அலுவலர் சங்கர் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story