அதிகார போட்டியால் மக்கள் நலத்திட்டங்களை கிரண்பெடி முடக்குகிறார் - ம.தி.மு.க. குற்றச்சாட்டு


அதிகார போட்டியால் மக்கள் நலத்திட்டங்களை கிரண்பெடி முடக்குகிறார் - ம.தி.மு.க. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 April 2018 4:45 AM IST (Updated: 19 April 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

அதிகார போட்டியால் மக்கள் நலத்திட்டங்களை கவர்னர் கிரண்பெடி முடக்கி வருகிறார் என்று ம.தி.மு.க. குற்றஞ்சாட்டியுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநில ம.தி.மு.க. பொறுப்புக்குழு தலைவர் கபிரியேல் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ம.தி.மு.க.வின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம் புதுவையில் அடுத்த மாதம் (மே) 6-ந் தேதி நடைபெற உள்ளது. விழாவில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொள்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. மத்திய அரசின் இத்தகைய செயலை அரசியல் சூழ்ச்சியாகவே கருதுகிறோம். தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்காக எத்தனை கேடுகள் வந்தாலும் அதனை எதிர்த்து போராடுபவராக வைகோ உள்ளார்.

மத்திய ஆட்சியாளர்களும், கவர்னரும் புதுச்சேரியில் நடைபெற்று வரும் மக்கள் ஆட்சியை சிதைத்து வருகின்றனர். கவர்னர் கிரண்பெடி புதுச்சேரி மக்கள் நலத்திட்டங்களை முடக்கி வருகின்றார். புதுவையில் அதிகார போட்டி நடைபெறுகின்றது. கவர்னர் கிரண்பெடி தனது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி மாநில அரசுக்கு தொல்லை கொடுத்து வருகிறது. ஏழை மாணவர்கள் மருத்துவ கல்வியை பெற முடியாத அளவிற்கு மத்திய அரசு நீட் தேர்வை தான்தோன்றித்தனமாக நுழைத்துள்ளது. இதனை ம.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story