கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு
கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
கூடலூர்,
கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையின் இருபுறமும் ஏராளமான குடியிருப்புகள், கடைகள் உள்ளன. இதுதவிர அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள், நகராட்சி மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளது. இதேபோல் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து ஹெல்த்கேம்ப் வழியாக ஊட்டிக்கு இணைப்பு சாலையும் செல்கிறது.
இந்த நிலையில் நகராட்சி அலுவலகம் தொடங்கி கெவிப்பாரா, பாலவாடி உள்பட ஓவேலி செல்லும் சாலையோரம் உள்ள தெருவிளக்குகள் பெரும்பாலானவை சரிவர எரியாமல் உள்ளது. இதனால் இருள் சூழ்ந்த பகுதி வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இருள் சூழ்ந்து காணப்படும் இந்த பகுதிகள் வழியாக கெவிப்பாரா, அரசு மேல்நிலைப்பள்ளி, நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் காட்டு யானைகள் சாலையில் வந்து நிற்கின்றன.
இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை காணப்படுகிறது. வ.உ.சி. நகர் காபி தோட்டம், கெவிப்பாரா பகுதியில் 4 காட்டு யானைகள் முகாமிட்டு அந்த பகுதி மக்களை பீதிக்கு உள்ளாக்கி வருகிறது.
இதனால் பகல் நேரத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. தெருவிளக்குகளை பராமரித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட துறையினர் கண்டு கொள்வது இல்லை என புகார் எழுந்துள்ளது. காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு பொதுமக்கள் உயிரிழந்து வரும் சூழலில் எரியாத தெருவிளக்குகளை சீரமைத்து நிம்மதியாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் தெரு விளக்குகள் எரியாததால் வனவிலங்குகளின் அட்ட காசமும் அப்பகுதியில் அதிகரித்து வருகிறது. இதனால் தெருவிளக்குகள் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

Related Tags :
Next Story