சீரமைப்பு பணியால் ஒரு வழிப்பாதையாக மாற்றம்: பாலாறு புதிய பாலத்தில் போக்குவரத்து நெரிசல்
வேலூர் பாலாறு பழைய பாலம் சீரமைக்கப்பட உள்ளது. அதற்காக புதிய பாலம் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
வேலூர்,
புதிய பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
வேலூர்-காட்பாடி இடையே பாலாறு ஓடுகிறது. வேலூரையும், காட்பாடியையும் இணைக்கும் வகையில் போக்குவரத்து வசதிக்காக 2 பாலங்கள் உள்ளன. அதில் பழைய பாலத்துக்கு ‘போளூர் சுப்பிரமணியம்’ பெயரும், புதிதாக கட்டப்பட்ட பாலத்துக்கு ‘அண்ணா’ பெயரும் வைக்கப்பட்டுள்ளது. வேலூர் பாலாறு பழைய பாலம் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. பாலத்தின் பல பகுதிகள் பழுதடைந்துள்ளன.
எனவே பழைய பாலத்தை ரூ.4½ கோடியில் சீரமைக்கும் பணி தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. அதையொட்டி நேற்று முதல், அடுத்த மாதம் (மே) 31-ந்தேதி வரை பாலாறு பழைய பாலத்தில் போக்குவரத்துப் பயன்பாடு தடை செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் புதிய பாலம் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும் என்றும், அதில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
அதன்படி வேலூர் பழைய பாலத்தில் நேற்று காலை முதல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் இதுபற்றிய அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு இருந்தது. காட்பாடி, சித்தூரில் இருந்து வரும் வாகனங்கள் பாலாறு புதிய பாலம் வழியாக வேலூருக்கு வர அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு இருந்தது.
வேலூரில் இருந்து காட்பாடிக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் காட்பாடியில் இருந்து வேலூருக்கு வரும் வாகனங்கள் புதிய பாலத்தில் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக ஊர்ந்து வந்தன. வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து காட்பாடிக்கு பஸ்கள் செல்லும்போது போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. அதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

Related Tags :
Next Story