பழமையான, சுவையான தோசைக் கடை


பழமையான, சுவையான தோசைக் கடை
x
தினத்தந்தி 19 April 2018 11:00 PM GMT (Updated: 19 April 2018 7:03 AM GMT)

பெங்களூருவின் சம்பஞ்சி ராமா நகரில் இருக்கும் ஒரு ஓட்டலில் எப்போதுமே கூட்டம் அலைமோதுகிறது.

30 வருடங்கள் பழமையான இந்த ஓட்டலில், தோசை வகைகள் பிரமாதமாக இருக்குமாம். அதிலும் குறிப்பாக நெய் தோசை, மசாலா தோசைகளை சாப்பிட, தனிக்கூட்டமே கடை வாசலில் வரிசைகட்டி நிற்கிறது. சின்னக் கடை என்பதால் வாடிக்கையாளர்கள், சில மணிநேரம் காத்திருந்துதான் தோசையை சுவை பார்க்க முடியும். இந்த ஓட்டலின் கூடுதல் சிறப்பு என்ன தெரியுமா...? தோசை பாதிப் பாதியாகப் பரிமாறப்படும். அதற்கும் தனிக்கதை இருக்கிறது. ஏனெனில் ஒருவர் சாப்பிடும்போது அடுத்தவர் காத்திருக்கக்கூடாது என்பதற்காக, கையில் இருக்கும் தோசைகளை பாதிப் பாதியாகப் பகிர்ந்து கொடுக்கிறார்கள். மேலும் இங்கு பரிமாறப்படும் புதினா சட்னி, நெய் சட்னிகளின் சுவையை வேறு எங்கும் அனுபவிக்க முடியாதாம். அதுவும் சித்தப்பா ஓட்டலின் பெருமையை வானுயர உயர்த்திப்பிடிக்கிறது. 

Next Story