ஹிட்லர் மறைக்க விரும்பிய படம்!

பொதுமக்கள் பார்வையில் இருந்து சர்வாதிகாரி ஹிட்லர் ஒரு புகைப்படத்தை மறைக்க நினைத்தார்.
சர்வாதிகாரி ஹிட்லர், பொதுமக்கள் பார்வையில் இருந்து மறைக்க விரும்பிய புகைப்படம் சமீபத்தில் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அப்படத்தில், அரை டிரவுசரும் சாக்ஸும் அணிந்து, கால்களை குறுக்காகப் போட்டபடி ஹிட்லர் அமர்ந்திருக்கிறார்.
மக்களில் ஒருவனாகத் தன்னைக் காட்டிக்கொள்வதற்காக 1920-ம் ஆண்டு ஹிட்லர் எடுத்துக்கொண்ட புகைப்படம் அது.
ஆனால் 1933-ம் ஆண்டு பதவியேற்றபின், தனது சர்வாதிகார தோற்றத்துக்குச் சற்றும் பொருந்தாத அந்தப் படத்தை மறைப்பதற்கு ஹிட்லர் பெரிதும் முயன்றாராம்.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் விக்டர் லுட்ஸ் என்ற நாசி ெஜர்மானியத் தளபதியின் வீட்டிலிருந்து இங்கிலாந்து ராணுவ அதிகாரி ஒருவரால் இந்த அரிய புகைப்படம் அடங்கிய ஆல்பம் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 70 ஆண்டுகளாக குறிப்பிட்ட அதிகாரி அந்த ஆல்பத்தை ஒரு நினைவுப்பொருளாக வைத்திருந்திருக்கிறார்.
இரண்டாம் உலகப் போரில் உயிர் தப்பிய விக்டரின் மகனும் ஜெர்மானிய ராணுவத்தில் பணிபுரிந்திருக்கிறார்.
ஓர் இளைஞராக ஹிட்லருடன் அவர் நிற்கும் படங்களும் அவரது குடும்பப் படங்களும் அந்த ஆல்பத்தில் காணப்படுகின்றன.
அது மட்டுமின்றி, பெரும்பாலும் கருப்பு வெள்ளை வீடியோக்களிலேயே உலகத்தால் பார்க்கப்பட்ட ஹிட்லர், வண்ணத்தில் தோன்றும் வீடியோ ஒன்றும், வீடியோ எடுப்பதைக் கண்டதும் அவர் பின்வாங்கும் வீடியோ ஒன்றும் கிடைத்துள்ளன.
Related Tags :
Next Story