பனைக்குளம் நத்தர் ஒலியுல்லா தர்கா கந்தூரி விழா
பனைக்குளம் நத்தர் ஒலியுல்லா தர்கா கந்தூரி விழா நடைபெற்றது. விழாவில் இன்னிசையுடன் கொடியேற்றம் நடந்தது.
பனைக்குளம்,
மண்டபம் யூனியன் பனைக்குளம் மெயின் ரோட்டில் நத்தர் ஒலியுல்லா தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் தீன் கொடியேற்றப்பட்டு கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நடைபெற்றது.
இதனையொட்டி பனைக்குளம் ஜும்மா பள்ளி தலைமை இமாம் ஹாஜா முகைதீன் ஆலிம் தலைமையில் மவுலீது ஓதப்பட்டது. அதனை தொடர்ந்து முஸ்லிம் பரிபாலன சபை, ஜமாத் நிர்வாகிகள், முஸ்லிம் நிர்வாக சபை, ஐக்கிய முஸ்லிம் சங்கம் நிர்வாகிகள் முன்னிலையில் முஸ்லிம் பரிபாலன சபை தலைவர் அபுல்ஜமீல் தக்பீர் முழக்கத்துடன் தீன் கொடியேற்றினார். பின்னர் பாவோடி பஜார் பகுதியில் இருந்து இன்னிசை முழங்க தீன் கொடி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்து தர்காவை அடைந்தது. பின்னர் உலக மக்கள் அமைதிக்காகவும், மழை வேண்டியும், சிறப்பு தூஆ ஓதப்பட்டது. அதனை தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நெய்சாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை செயலாளர் சாதிக் அலி, முஸ்லிம் நிர்வாக சபை தலைவர் சபீக்குர் ரகுமான், செயலாளர் கரீம்கனி, ஐக்கிய முஸ்லிம் சங்க தலைவர் முகமது இக்பால், செயலாளர் பலீல், ஜமாத் நிர்வாகி நசீர் அலி, சாகுல்ஹமீது, ரகுமத்துல் ஆலம், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் நாகூர் களஞ்சியம், ஜெய்னுல் அஸ்லாம், வாலிப முஸ்லிம் சங்க நிர்வாகிகள், பனைக்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முஸ்லிம் பரிபாலன சபை, ஐக்கிய முஸ்லிம் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story