பட்டாசு ஆலை மூலப்பொருட்களில் கலப்படமா?
பட்டாசு ஆலைகளில் கலப்படமான மூலப் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவகாசி,
பட்டாசு ஆலைகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது அதிக அளவில் விபத்துகள் ஏற்பட்டு உயிர்சேதம் தொடர்ந்து ஏற்படுவதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகள் எடுத்து விபத்துகளை குறைக்கவும், தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் விபத்துகளுக்கு மூலப்பொருள் கலவையின் போது ஏற்படும் மனித தவறு காரணம் என்று அதிகாரிகள் கூறினாலும், மூலப்பொருட்களில் செய்யப்படும் கலப்படம் தான் காரணம் என்று சிலர் கூறுகிறார்கள்.
விலை குறைவாக உள்ளது என்பதால் சில பட்டாசு ஆலைகளில் தரம் குறைந்த அல்லது கலப்படமான மூலப்பொருட்களை பட்டாசு உற்பத்திக்கு பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் தீ விபத்து ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
பட்டாசு உற்பத்திக்கு பயன்படுத்தும் மூலப்பொருட்கள் தற்போது சில்லரை விலையில் கடைகளில் வாங்கப்படுகிறது. இதில் கலப்படம் இருக்க வாய்ப்பு உள்ளது. அப்படி கலப்படம் இருந்தால் அது வேதிவினை மாற்றத்தால் விபத்து ஏற்படுத்தும். அதனால் மூலப்பொருள் விற்பனை செய்யப்படும் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கலாம். இதில் மாவட்ட நிர்வாகம் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.
Related Tags :
Next Story