5-ம் ஆண்டு நினைவு தினம்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் தலைவர்கள் அஞ்சலி
‘தினத்தந்தி’ அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 5-ம் ஆண்டு நினைவுத்தினத்தையொட்டி சென்னையில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
சென்னை,
பத்திரிகை உலகில் வியத்தகு சாதனை படைத்து முத்திரை பதித்தவர் ‘தினத்தந்தி’ அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 5-ம் ஆண்டு நினைவு நாளான நேற்று சென்னை போயஸ்கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்குள்ள நினைவு பீடத்தில் அவரது மகனும், ‘தினத்தந்தி’ இயக்குனருமான சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பா.சிவந்தி ஆதித்தனாரின் பேரனும், மாலை மலர் இயக்குனருமான பா.சிவந்தி ஆதித்தன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மனைவி மாலதி சிவந்தி ஆதித்தன், மகள் அனிதா குமரன் மற்றும் மூத்த மருமகன் ஜெயராமையா, பேத்தி கனிகா, அவரது கணவர் வருண்மணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
‘தினத்தந்தி’, டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணி முத்து, ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, ராணி பிரிண்டர்ஸ், இந்தியா கேப்ஸ், கெய் டிராவல்ஸ், ஏ.எம்.என்.டி.வி. ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் அஞ்சலி செலுத்தியவர்களின் விவரம் வருமாறு:-
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், துணைத்தலைவர் எச்.வசந்தகுமார், முன்னாள் மாநிலத்தலைவர் கே.வி.தங்கபாலு, மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், எம்.எஸ்.திரவியம், ரூபி மனோகரன், சிவ.ராஜசேகரன், பொதுச்செயலாளர் ஜி.கே.தாஸ், சிவாஜி நாதன், தியாகராயநகர் பகுதி தலைவர் நாஞ்சிக்குளம் சரவணன், ரவிராஜ், முத்தமிழ், நிர்வாகிகள் எம்.ஜி.ராமசாமி, சித்ரா கிருஷ்ணன், டி.எம்.தணிகாசலம், மத்திய சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் சூளை கே.ராஜேந்திரன்,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், துணைத்தலைவர் கோவைத்தங்கம், விடியல் சேகர், மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன், செயற்குழு உறுப்பினர் டி.சிவபாலன், நாஞ்சில் நேசய்யா, தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், வர்த்தக அணி மாநிலத்தலைவர் ஆர்.எஸ்.முத்து, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்.
முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், விவசாய அணி மாநில செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், திருச்செந்தூர் ஒன்றிய துணை செயலாளர் பாலாஜி, வட சென்னை மாவட்ட துணைத்தலைவர் ராமய்யா, பொதுச்செயலாளர் வன்னியராஜன், ஆர்.கே.நகர் பகுதி துணைத்தலைவர் ஓம்.சேகர்.
தி.மு.க. சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, தி.மு.க. மாநில பிரசாரக்குழு தலைவர் சிம்லா முத்துசோழன், எழும்பூர் தெற்கு பகுதி வட்டம் சூளை குப்புசாமி, அ.தி.மு.க. பேச்சாளர் பி.சி.அன்பழகன், இ.சி.சேகர்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், மாவட்ட தலைவர் முருகேச பாண்டியன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, சென்னை மண்டல அமைப்பு செயலாளர் ஜெயராமன், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தென் சென்னை கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் வைகோ மைக்கேல்ராஜ், தேர்தல் பணிக்குழு துணை செயலாளர் பூங்காநகர் ஆர்.ராமதாஸ், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சிவா.
சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொருளாளர் கண்ணன், புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ஏ.ரவிக்குமார், இணை பொதுச்செயலாளர் ஆர்.டி. சேதுராமன், இளைஞரணி செயலாளர் எஸ்.ஏ.ராஜாராம். லட்சிய தி.மு.க. பொதுச்செயலாளர் டி.ராஜேந்தர், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி வெற்றிவேல்.
சென்னை வாழ் நாடார்கள் சங்க தலைவர் பி.சின்னமணி நாடார், செயலாளர் தங்கமுத்து, பொருளாளர் கே.வி.பி.பூமிநாதன், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், பொருளாளர் சுந்தரேசன், தமிழ்நாடு நாடார் சங்க மாநிலத்தலைவர் முத்துரமேஷ், துணைத்தலைவர் ராமராஜ், துணை பொதுச்செயலாளர் மார்க்கெட் ராஜா, ஆர்.கே.நகர் கார்த்திக், சென்னை நாடார் சங்க தலைவர் கரண்சிங், செயலாளர் டி.விஜயகுமார். மீஞ்சூர் வட்டார நாடார் உறவின் முறை தலைவர் எம்.ஏ.திரவியம், செயலாளர் கே.அன்பழகன், பொருளாளர் சிவசுப்பிரமணியன்.
நெல்லை தட்சணமாற நாடார் சங்க மும்பை கிளை தலைவர் ராமராஜா, தட்சணமாற நாடார் சங்க பொருளாளர் செல்வராஜ், பெரம்பூர் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலைவர் பத்மநாபன், நெற்குன்றம் நாடார் சங்க தலைவர் முத்துராமன், அகில இந்திய நாடார் சக்தி தலைவர் விஜயா சந்திரன், ஆலந்தூர் நாடார் சங்க தலைவர் பி.கணேசன், செயலாளர் செல்வக்குமார், பொருளாளர் லட்சுமணன், துணைத்தலைவர் தங்கராஜ், ஆர்.கே.கதிரேசன், சென்னை கள்ளிக்குளம் நாடார் சங்கத்தலைவர் என்.ஏ.தங்கத்துரை, செயலாளர் ஜூலியஸ், வண்ணாரப்பேட்டை நாடார் சங்க தலைவர் எஸ்.ஆர்.பி.ராஜன், பொருளாளர் ராஜேஷ்.
திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலைவர் ராஜகோபால், பொதுச்செயலாளர் திருப்புகழ், பொருளாளர் சிங்கராயர், நிர்வாகிகள் ராஜசேகரன், பச்சையப்பன், தேவராஜ் சீலன், ராஜேந்திரன், ராமசாமி, சாமுவேல், ஹரிதாஸ், கதிர்வேல், மாணிக்கவேல், சரவணபவன், மாணிக்கவாசகம், ஸ்டீபன், தேவசகாயம், சேம்.
சென்னை வாழ் பசுவந்தனை நாடார் சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், குழந்தைவேல், சண்முகராஜ், விஜயராஜ், தமிழ்நாடு நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மகேஷ் காமராஜ், கலையரசன். தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க நிறுவனத் தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், பொருளாளர் எம்.ஆர்.குணசீலன், துணைத்தலைவர் செல்வக்குமார், மாடசாமி. நாடார் மறுமலர்ச்சி இயக்க தலைவர் பாலமுருகன்.
நாடார் மக்கள் சக்தி தலைவர் ஹரி, சென்னை ஓட்டேரி நாடார் ஐக்கிய சங்க தலைவர் தங்கசாமி, பொதுச்செயலாளர் சாலமோன், பொருளாளர் எம்.செல்வராஜ், சட்ட ஆலோசகர் கே.செல்வராஜ், மவுலிவாக்கம் சுற்றுவட்டார நாடார்கள் சங்க தலைவர் ஆனந்தராஜ், பொதுச்செயலாளர் பாஸ்கர், துணை பொதுச்செயலாளர் பொன்.ராஜ், அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை சென்னை மண்டல தலைவர் செல்வராஜ், சேலம் நாடார் சங்க துணை செயலாளர் சேலம் மாடசாமி.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற நிர்வாகக்குழு உறுப்பினர் காயல் இளவரசு, பொருளாளர் நசீர் அகமது, தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், நெல்லை மாவட்ட செயலாளர் எம்.தோப்புமணி, திருவொற்றியூர் நகர தலைவர் டி.முல்லைராஜா, ஆலோசகர் முல்லை தேவராஜ், திருத்தணி ஒன்றிய தலைவர் எம்.கே.ராமசந்திரன், வட சென்னை மாவட்ட தலைவர் தங்கபெருமாள், செயலாளர் ராபர்ட், அசோக்நகர் செயலாளர் பொன்.அருணாசல பாண்டியன், துணை செயலாளர் ஸ்ரீதரன் பாண்டியன், பொருளாளர் சுந்தரமூர்த்தி, திருவள்ளூர் மத்திய மாவட்ட தலைவர் சுரேஷ், செயலாளர் சுபாஷ், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பண்பாட்டு கழக தலைவர் மாரிமுத்து, பொதுச்செயலாளர் ஸ்டீபன், சி.பா.ஆதித்தனார் சமூக நல சேவை இயக்க பேரவை தலைவர் பி.சி.பச்சைக்கனி, அணியாப்பூர் மன்ற அமைப்பாளர் மணலி மா.ராஜகோபால், திருச்சி புறநகர் மாவட்ட துணைச்செயலாளர் ஏ.செல்வம்,
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பரங்கிமலை பி.சி.பாபு, நெல்சன், விஜய் ரத்தீஷ், சுப்பிரமணி, விஜய், காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் சிலம்பு சுரேஷ், சென்னை மண்டல தலைவர் பால்பாண்டியன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பொதுச்செயலாளர் ஜோதிலிங்கம், அகில பாரத இந்து மக்கள் அமைப்பு மாநிலத்தலைவர் வி.எம். சிவக்குமார், சென்னை மாவட்ட தலைவர்கள் லோகேஷ், திவாகர், திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், தொழிலதிபர்கள் வி.ஜி.சந்தோசம், தண்டுபத்து ஜெயராமன், வி.பி.ஜெயராமன், எஸ்.ஆர். எஸ்.சபேஷ் ஆதித்தன், டி.சி. ராஜ்குமார், மயிலை சந்திர சேகர், டாக்டர் கருணாநிதி, தமிழ்நாடு கைப்பந்து கழக ஆயுட்கால தலைவர் முருகன், செயலாளர்கள் பிரபாகரன், நடராஜன், துணைத்தலைவர் தமிழ்செல்வன், தமிழ்நாடு கைப்பந்து சங்க தலைவர் எஸ்.வாசுதேவன், சென்னை மாவட்ட சிலம்பம் விளையாட்டு சங்க செயலாளர் செயது ஹமீது, பனைவாரிய முன்னாள் தலைவர் பார்வதி முத்து, தமிழன்னை கலைமன்ற செயலாளர் ரவி, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க செயலாளர் சம்பத், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி ஏ.ஜே.இஸ்மாயில், நம்ம ஊரு, நம்ம ஆறு கூட்டமைப்பு தலைவர் ராஜா, மைதீன் பிச்சை, சர்வதேச தற்காப்பு கலை வீரர்கள் நல்வாழ்வு தலைவர் கராத்தே சந்ரு, நடிகர் கே.ராஜன்.
சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஜான் நிக்கல்சன், எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மக்கள் மன்ற மாநில தலைவர் சாமிநாதன், ஐகோர்ட்டு வக்கீல் சிவசங்கர், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் எம்.எஸ்.காமராஜ், ஜெ.தீபா கணவர் மாதவன், வி.எஸ்.வேல் ஆதித்தன், நிலத்தரகர்கள் சங்க தலைவர் விருகை வி.கண்ணன், மணிமேகலை பிரசுரம் ராம்குமார், தமிழ்நாடு சவரத்தொழிலாளர் சங்க முன்னேற்ற பேரவை மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் தலைவர் தேசியத்தலைவர் பா.இசக்கிமுத்து, மாநிலத் தலைவர் மணியரசன்.
மெர்க்கண்டைல் வங்கி முன்னாள் இயக்குனர் ராஜ் குமார், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்க தலைவர் வி.பி.மணி, தமிழக விழிப்புணர்வு கட்சி நிறுவனத்தலைவர் வெ.தியாகராஜன், தலித் முன்னேற்ற கழகம் நிறுவனர் செ.அன்பின்பொய்யாமொழி, மாநில செயலாளர் குமார், தமிழ்நாடு கட்டுமான பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலவாழ்வு சங்க தலைவர் உமாசங்கர், மணலி புறநகர் அய்யா வைகுண்ட தர்மபதி நிர்வாகிகள் தங்கபெருமாள், தேவதாஸ், திருவல்லிக்கேணி வட்டார நாடார் சங்க தலைவர் கே.சி.ராஜா, பொதுச் செயலாளர் கே.சிவராஜ்.
சென்னை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் அய்யப்பன், பாலமுருகன், அகில இந்திய மனித உரிமைகள் தொழிற்சங்க பேரவை தலைவர் முத்துராமன், செயல் தலைவர் ராஜேஷ், அகில இந்திய பொதுச்செயலாளர் சுரேஷ்பாபு, சென்னை பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்ற தலைவர் திருப்பதி, பொருளாளர் புவனேஸ்வரன், மாநில ஆலோசகர் வைரவராஜன், அகில பாரத பெருந்தலைவர் காமராஜர் மக்கள் நற்பணி இயக்க மாநில பொதுச்செயலாளர் மதன்வேல்ராஜன், மகளிரணி தலைவர் சுந்தரமீனாட்சி, தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க தலைவர் எம்.மாரித்தங்கம், மாநில செயலாளர் அப்துல்ஹாதி, தேவி கருமாரியம்மன் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வாசனா தனஞ்செயன், பாடிசுபா, முருகேசன், ராமச்சந்திரன்.
டாக்டர் சிவந்தி கைப்பந்து பவுண்டேஷன் செயலாளர் சித்திரைப்பாண்டியன் தலைமையில் விளையாட்டு வீராங்கனைகள் வந்திருந்து, அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story