கடலூரில் மண்பானை விற்பனை அமோகம்


கடலூரில் மண்பானை விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 20 April 2018 3:30 AM IST (Updated: 20 April 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் மண்பானைவிற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

கடலூர், 

தமிழகம் முழுவதும் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இளநீர், கரும்புச்சாறு, மோர் போன்றவற்றை பொதுமக்கள் பருகி ஓரளவு வெப்பத்தை தணித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நீர்சத்து நிறைந்த தர்பூசணி, வெள்ளரிப்பழம், கிர்ணி பழம் ஆகியவற்றையும் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.

இதனால் எங்கு பார்த்தாலும் குளிர்பான கடைகளில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதுபோல் சாலையோரம் உள்ள தர்பூசணி, கிர்ணிப்பழம், வெள்ளரிக்காய் விற்பனை செய்யும் இடங்களிலும் பொதுமக்கள் கூட்டம் காணப்படுகிறது.

மேலும் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் குளிர் சாதன பெட்டியாக திகழும் மண் பானைகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. கடலூரில் சாவடியில் உள்ள மண்பாண்டம் விற்பனையகங்களில் மண்பானைகளை பொதுமக்கள் வாங்கிசெல்கிறார்கள். இங்கு சாதாரண மண் பானைகள், குழாய் பொருத்தப்பட்ட மண் பானைகள் மற்றும் சிறிய அளவிலான குடுவைகளும் விற்பனைக்காக உள்ளன. இதில் சாதாரண மண் பானைகள் ரூ.150-க்கும், குழாய் பொருத்தப்பட்ட மண் பானைகள் ரூ.250-ல் இருந்து ரூ.280 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மண்பானைகளில் தண்ணீர் ஊற்றி வைத்தால் இயற்கையான சுவையுடன் குளிர்ச்சியான தண்ணீராக அருந்தலாம் என்பதால் இவற்றை பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் வாங்கிச்சென்ற வண்ணம் உள்ளனர்.

Next Story