அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 April 2018 2:59 AM IST (Updated: 20 April 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் தாலுகா அலுவலகம் முன்பாக அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரக்கோணம்,

ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க தலைவர் வி.என்.பார்த்திபன் தலைமை தாங்கினார். செயலாளர் தாஸ்பிரகாஷ், வருவாய்த் துறை சங்க தலைவர் சரவணன், செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொது சுகாதார துறை சங்க தலைவர் அன்புச்செல்வம் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், பொது சுகாதார துணை இயக்குனரை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்க தலைவர் நரசிம்மலு, ஏ.பி.எம்.சீனிவாசன் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கம் உள்பட பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் ஊரக வளர்ச்சி துறை சங்க இணை செயலாளர் புஷ்பராஜ் நன்றி கூறினார்.

Next Story