தென்னை மரங்களில் மண்டை ஓடு, எலும்புகள் கட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு


தென்னை மரங்களில் மண்டை ஓடு, எலும்புகள் கட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 April 2018 10:30 PM GMT (Updated: 19 April 2018 9:29 PM GMT)

துவரங்குறிச்சி அருகே தென்னை மரங்களில் மண்டை ஓடு, எலும்புகள் கட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு

துவரங்குறிச்சி,

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தத்தை சேர்ந்தவர் முகமது கனி. இவருக்கு துவரங்குறிச்சி அருகே உள்ள கொண்டையம்பட்டியில் தென்னந்தோப்பு உள்ளது. இந்நிலையில் அந்த தென்னந்தோப்பில் மர்ம நபர்கள் தொடர்ந்து இளநீர் மற்றும் தேங்காயை பறித்து சென்றனர். இதை தடுக்க முகமது கனி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார். ஆனால் அவர் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் மரத்தில் ஏறி இளநீர் மற்றும் தேங்காயை பறித்து சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் 6 மரங்களில் மண்டை ஓடு மற்றும் எலும்புகளை அபாய சின்னம் போன்று கட்டி வைத்திருந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் இரவில் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக துவரங்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் துவரங்குறிச்சி போலீசார், முகமது கனியை தொடர்பு கொண்டு மண்டைஓடு உள்ளிட்டவற்றை உடனடியாக அப்புறப்படுத்தும்படி கூறினர். மரத்தில் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கட்டப்பட்டிருந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story