ரூ.8.5 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம்; அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்
ஆப்பக்கூடல் காமநாயக்கன்பாளையத்தில் ரூ.8.5 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் அமைச்சர் கே.சி.கருப்பணன் பணியை தொடங்கி வைத்தார்.
அந்தியூர்,
அந்தியூர் அருகே ஆப்பக்கூடல் காமநாயக்கன்பாளையத்தில் மிகவும் பழமையான கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இதனால் அந்த அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றோர்கள் அச்சப்பட்டனர். மேலும் பொதுமக்கள் அங்கன்வாடி மையத்துக்கு புதிதாக கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து காமநாயக்கன்பாளையத்தில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்ட ரூ.8½ லட்சம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பணிகள் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமை தாங்கி, பணியை தொடங்கி வைத்தார்.
விழாவில், ஆப்பக்கூடல் பேரூராட்சி செயல் அதிகாரி ஹேமா, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், பவானி ஒன்றிய செயலாளர் தங்கவேல் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story