பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள பெண் போலீஸூக்கு அனுமதி


பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள பெண் போலீஸூக்கு அனுமதி
x
தினத்தந்தி 20 April 2018 5:23 AM IST (Updated: 20 April 2018 5:23 AM IST)
t-max-icont-min-icon

பெண் போலீஸ் லலிதா சால்வே பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள முதல் - மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அனுமதி அளித்து உள்ளார்.

மும்பை,

பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் லலிதா சால்வே (வயது29). இவர் கடந்த 2010-ம் ஆண்டு மராட்டிய காவல்துறையில் பெண் போலீசாக பணியில் சேர்ந்தார். இந்தநிலையில் இவரது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு ஆண்களுக்குரிய தன்மைகள் அதிகமானதாக தெரிகிறது.

இதையடுத்து டாக்டர்களை அணுகிய போது ஆணாக மாற பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள லலிதா சால்வேயை அறிவுறுத்தினர். இதையடுத்து லலிதா சால்வே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய மாநில போலீஸ் தலைமையகத்தில் அனுமதி கேட்டு இருந்தார். ஆனால் போலீஸ் தலைமையகம் அவருக்கு அனுமதி கொடுக்கவில்லை.

எனவே அவர் இதுகுறித்து முதல் - மந்திரியின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில நிர்வாக தீர்ப்பாயத்திடமும் முறையிட்டு இருந்தார். இந்தநிலையில் முதல் - மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் லலிதா சால்வே பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதி அளித்து உள்ளார். இந்த ஒப்புதல் மூலம் லலிதா சால்வே பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு ஆண் போலீசாக தொடர்ந்து மராட்டிய காவல்துறையில் பணியாற்ற முடியும் என தெரிகிறது. 

Next Story