சங்கரன்கோவிலில் பரிதாபம் தூண் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு


சங்கரன்கோவிலில் பரிதாபம் தூண் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு
x
தினத்தந்தி 20 April 2018 9:15 PM GMT (Updated: 20 April 2018 1:06 PM GMT)

சங்கரன்கோவிலில் தூண் இடிந்து விழுந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

சங்கரன்கோவில், 

சங்கரன்கோவிலில் தூண் இடிந்து விழுந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

தூண் இடிந்து விழுந்தது 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் சங்கர். அவருடைய மனைவி கார்த்திகா. இவர்களுடைய மகன் சபரி(வயது 4). சங்கர் ஈரோடு மாவட்டம் பண்ணாரியில் வேலை பார்த்து வருகிறார். சபரி சங்கரன்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் எல்.கே.ஜி படித்து வந்தான்.

பள்ளிக்கூட விடுமுறை விடப்பட்டுள்ளதால் சபரி நேற்று மதியம் தனது வீட்டின் அருகே காம்பவுண்டில் உள்ள சிமெண்டு தூண் அருகே நின்று விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக சிமெண்டு தூண் திடீரென இடிந்து சிறுவனின் மீது விழுந்தது.

பரிதாப சாவு 

இதனால் தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் சபரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தான். இதனை பார்த்ததும் சிறுவனின் தாயார் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார். அங்கு ரத்த வெள்ளத்தில் தனது மகன் பலியாகி கிடப்பதை கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார். மேலும் அக்கம்பக்கத்தினரும் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்து மனவேதனை அடைந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வந்தனர். சிறுவன் சபரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் சபரியின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story