உப்பனூர் அரசு நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட பூமிபூஜை


உப்பனூர் அரசு நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட பூமிபூஜை
x
தினத்தந்தி 20 April 2018 10:15 PM GMT (Updated: 20 April 2018 6:49 PM GMT)

உப்பனூர் அரசு நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட பூமிபூஜையை தளி பிரகாஷ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

தேன்கனிக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள உப்பனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் பெங்களூரு கிழக்கு மாவட்டம் ரவுன்ட்டேபுல் ஆப் இந்திய சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம் கட்டும் பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜ் தலைமை தாங்கினார். பெங்களூரு கிழக்கு மாவட்டம் ரவுன்ட்டேபுல் ஆப் இந்திய தலைவர் மான்டி, இயக்குநர் குஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆல்பா சீட்ஸ் நிறுவன மேலாளர் கிருஷ்ணன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், தளி எம்.எல்.ஏ.வுமான பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் தளி வடக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசலுரெட்டி, அவைத்தலைவர் கிரிஸ், ஆசிரியர்கள் சீனிவாசலு, சந்திரசேகர், முனேஷ், சர்மிளா, புஷ்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story