மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தேசிய தொழில்பழகுனர் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்


மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தேசிய தொழில்பழகுனர் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 21 April 2018 4:00 AM IST (Updated: 21 April 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தொழிற்பயிற்சி பெற்றவர்கள் தேசிய தொழில்பழகுனர் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்.

தர்மபுரி,

மத்தியஅரசு வழங்கும் தேசிய தொழில்பழகுனர் சான்றிதழ் பெற அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் குறிப்பிட்ட தொழிற்பிரிவில் பயின்று தேசிய தொழில் சான்றிதழ் பெற்றவர்கள் இதே தொழிற்பிரிவில் தனி நபராக அகில இந்திய தொழில் பழகுனர் தொழிற்தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்து தேர்ச்சி பெற்று தேசிய தொழில் சான்றிதழ் பெற்றவர்கள், தொழில்பழகுனர் பயிற்சியினை தொழிற்சாலைகளில் முடிக்காதவர்கள், தொழில்பழகுனர் பயிற்சி வழங்கும் பட்டியலில் இடம் பெற்ற தொழில் நிறுவனங்களில் நேரடி பணியாளர்களாக குறைந்தபட்ச அனுபவம் பெற்றவர்கள் தேசிய தொழில்பழகுனர் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்.

இதன்படி வருகிற மே மாதம் 2,3,4-ந்தேதி ஆகிய 3 நாட்களில் செய்முறை தேர்வும், வருகிற 5-ந்தேதி பொறியியல் வரைகலை தேர்வும் நடைபெற உள்ளது. வருகிற 9,10,11-ந்தேதிகளில் இணைய தள வழியில் தேர்வு நடை பெறும். இதுதொடர்பாக விரிவான விவரங்களை அறிய அம்பத்தூர், கிண்டி, வடசென்னை, வேலூர், திருச்சி, கடலூர், தஞ்சாவூர், கோவை, சேலம், ஓசூர், தாராபுரம் மேட்டூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் முதல்வர்கள், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகங்களில் அமைந்துள்ள தொடர் அறிவுரை மைய உதவி இயக்குனர்களை அணுகலாம்.

தேர்வுக்கான விண்ணப்பங்களை அந்தந்த அரசு தொடர் அறிவுரை மையங்களில் உள்ள உதவி இயக்குனர்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம். இந்த விண்ணப்பங்களை தட்டச்சு செய்து விவரங்களை பூர்த்தி செய்து அதே மையங்களில் விண்ணப்பதாரர் பணிபுரியும் நிறுவனம் வழியாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக்கட்டணத்தை சார்பு கருவூலம், மாவட்ட கருவூலங்களில் செலுத்து சீட்டு மூலம் செலுத்தலாம். இந்த தேர்வில் பங்கேற்க தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story