திருமானூர் பகுதியில் விவசாயிகள் பிணம் போல் படுத்து போராட்டம்


திருமானூர் பகுதியில் விவசாயிகள் பிணம் போல் படுத்து போராட்டம்
x
தினத்தந்தி 21 April 2018 3:45 AM IST (Updated: 21 April 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பிணம் போல் படுத்து போராட்டம் நடத்தினர்.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றை பிளாட் போட்டு விற்கும் போராட்டம் நேற்று விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் மணியன் தலைமை தாங்கினார். மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். இது குறித்து அவர்கள் கூறும் போது கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்தால் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பயன் பெறும் பொதுமக்கள் மற்றும் ஆழ்துளை கிணறு வைத்து விவசாயம் செய்யும் விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள்.

ஆற்றில் மணல் இன்றி போனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போவதன் மூலம் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டு விடும். எனவே, திருமானூர் மற்றும் அதன் ஒன்றிய பகுதிகளில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கூறினர். தொடர்ந்து விவசாயிகள் ஆற்றில் பிணம் போல் படுத்துக்கொண்டு பல்வேறு கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

Next Story