வியாசர்பாடி ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் சர்வீஸ் சாலை அமைக்க இடையூறாக இருந்த 3 கோவில்கள் இடிப்பு
வியாசர்பாடியில் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் சர்வீஸ் சாலை அமைக்க இடையூறாக இருந்த 3 கோவில்கள், 3 வீடுகள் மற்றும் 4 கடைகள் இடித்து அகற்றப்பட்டன.
பெரம்பூர்,
சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து மாநில நெடுஞ்சாலைத் துறையின் மூலம் வியாசர்பாடி ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்கே மேல்பாலம் அமைக்கப்பட்டு 8 மாதத்துக்கு முன்பு திறந்துவைக்கப்பட்டது.
இந்த ரெயில்வே மேம்பாலத்தின் கீழே இருபுறமும் சர்வீஸ் சாலை அமைப்பதற்கு இடையூறாக வீடு, கடைகள், கோவில்கள் இருந்தன. இதனால் இந்த சாலை விரிவாக்க பணி தாமதமானது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட உள்ள வீடு, கடைகளின் உரிமையாளர்களுக்கு அரசு நிர்ணயித்த நஷ்டஈடு வழங்கப்பட்டது.
அந்த வீடு, கடைகளை அதன் உரிமையாளர்களே இடிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் நஷ்டஈடு பெற்றும் சிலர் வீடு, கடைகளை இடிக்காமல் இருந்தனர். இதேபோல் அந்த பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையான லட்சுமி அம்மன், விநாயகர் மற்றும் கிருஷ்ணர் ஆகிய 3 கோவில்கள் உள்ளன. அந்த கோவில்களையும் இடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து நேற்று நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் செந்தில்குமார் மற்றும் ஊழியர்கள் 3 பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் வியாசர்பாடி பகுதியில் ரெயில்வே மேம்பாலத்தின் கீழே இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்க இடையூறாக இருந்த 3 கோவில்கள், 3 வீடுகள் மற்றும் 4 கடைகளை இடித்து தரைமட்டமாக்கினர்.
முன்னதாக அந்த கோவில்களில் இருந்த சாமி சிலைகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றினர். இதனால் அங்கு திரளான மக்கள் குவிந்தனர். வியாசர்பாடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் இருபுறமும் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story