‘ஆறுகளில் நடக்கும் மணல் கொள்ளையால் விவசாயம் பாதிப்பு’ குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
ஆறுகளில் நடக்கும் மணல் கொள்ளையால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாக குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.
கூட்டத்தில் விவசாயிகள் கேட்ட கேள்விகளும், அதற்கு கலெக்டர் அளித்த பதில்கள்விவரம் வருமாறு:-
ஜோதிராமன் (விவசாயி):- பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு கடந்த ஒரு மாதமாக வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.18½ கோடி பாக்கி உள்ளது. அதனை உடனே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். திருநாவலூர் பகுதியில் உளுந்துக்குரிய இன்சூரன்ஸ் தொகையை வழங்க வேண்டும். மாம்பாக்கத்தில் மூடப்பட்டுள்ள ரெயில்வே கேட்டை திறக்க வேண்டும் அல்லது சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர்: கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகையை விரைவில் கிடைக்க ஆலை நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்படும். மாவட்டத்திற்கு உளுந்து பயிருக்குரிய இன்சூரன்ஸ் தொகை ரூ.46 கோடி வரப்பெற்றதில் ரூ.16 கோடி மட்டும்தான் வழங்காமல் பாக்கி உள்ளது. ஏனெனில் விவசாயிகள் தங்களது வங்கி கணக்கு எண்ணை தவறாக கொடுத்துள்ளதால் அவற்றை வழங்க முடியவில்லை. சரியான வங்கி கணக்கு எண்ணை பெற்று, சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் இன்சூரன்ஸ் தொகை செலுத்தப்படும். மாம்பாக்கத்தில் சுரங்கப்பாதை அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும்.
சுப்பிரமணியன்(விவசாயி): - கெண்டியாங்குப்பம் சங்கராபரணி ஆற்றில் 40 அடி வரை பள்ளம் தோண்டி மணலை கொள்ளையடித்து வருவதால், விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது. குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உடனுக்குடன் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதில்லை. ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் எடை போடுவதற்கு மூட்டை ஒன்றுக்கு ரூ.20-ம், சாக்கு மாற்ற ரூ.10-ம் எடைபோடும் தொழிலாளர்கள் வசூலிக்கின்றனர். பணம் கொடுக்கவில்லை என்றால் பிரச்சினை செய்கின்றனர்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்ற ஆறுகளிலும் மணல் கொள்ளை நடப்பதாகவும், இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
கலெக்டர்: மணல் கொள்ளையை தடுக்க போலீசார், வருவாய்த்துறையினர் மூலம் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது மேலும் தீவிரப்படுத்தப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்யப்படும். ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் வேளாண் அதிகாரிகள் மூலம் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பணம் வசூலிக்கும் தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ரவிச்சந்திரன்(விவசாயி):- உலகளாம்பூண்டி ஏரியில் திருட்டுத்தனமாக மண் எடுத்து விற்பனை செய்கின்றனர். இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
கலெக்டர்: நடவடிக்கை எடுக்கப்படும்.
சிவராமன்(விவசாயி):- கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாட்டுக்கோழி வளர்க்க அனுமதி வழங்க வேண்டும்.
கலெக்டர்: பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கலியமூர்த்தி(விவசாயி):- விவசாய கிணறுகளை தூர்வார வங்கிக்கு சென்று கடனுதவி கேட்டால் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகளுக்கு மட்டும்தான் கடனுதவி வழங்கப்படும் என்கிறார்கள். கிணறுகளை தூர்வார அனைத்து விவசாயிகளுக்கும் கடனுதவி வழங்க வேண்டும்.
கலெக்டர்: கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் மட்டுமின்றி எந்த விவசாயியாக இருந்தாலும் கிணறுகளை தூர்வார முறையாக ஆவணங்களுடன் மத்திய கூட்டுறவு வங்கியை அணுகினால் கண்டிப்பாக கடனுதவி வழங்கப்படும்.
முருகன்(விவசாயி):- தண்டரை கிராமத்தில் கடந்த சில வாரங்களாக குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது. அதை உடனே சரிசெய்ய வேண்டும்.
கலெக்டர்: சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
கண்ணன்(விவசாயி):- அயன்வேலூர் பகுதியில் கெடிலம் ஆற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர்: அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Tags :
Next Story