சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 April 2018 10:30 PM GMT (Updated: 20 April 2018 8:32 PM GMT)

சிதம்பரம் வடக்குவீதியில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிதம்பரம்,

சிதம்பரம் தலைமை தபால் நிலையத்தில் இயங்கி வரும் ஆர்.எம்.எஸ். சேவை பிரிவை சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் மூடிவிட்டு விருத்தாசலம் ஆர்.எம்.எஸ்.-ல் இணைக்கும் முடிவை கைவிட கோரியும், வணிகர்கள், மாணவர்கள், நீதித்துறை சார்புடையவர்கள், அரசு அலுவலர்கள் என அனைவருக்கும் பயன்படக்கூடிய ஆர்.எம்.எஸ். சேவை பிரிவு தொடர்ந்து சிதம்பரத்திலேயே இயக்க கோரியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர்குழு சின்னையன் தலைமை தாங்கினார்.

வட்ட தலைவர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தார். மாநிலக்குழு மூசா, மாதவன், மாவட்ட செயற்குழு ராமச்சந்திரன், நகர செயலாளர் பாரதிமோகன், மாவட்டக்குழு முத்து, வட்ட செயலாளர் பன்னீர்செல்வம், நகர செயலாளர் மல்லிகா, நகர தலைவர் கார்த்திக் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில் வட்ட தலைவர் மோகன்தாஸ் நன்றி கூறினார்.

Next Story