திருப்புவனம், கானாடுகாத்தான் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்


திருப்புவனம், கானாடுகாத்தான் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 20 April 2018 9:30 PM GMT (Updated: 2018-04-21T02:02:27+05:30)

திருப்புவனம், கானாடுகாத்தான் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருப்புவனம்,

திருப்புவனம் நெல்முடிகரையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று(சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்புவனம், லாடனேந்தல், தூதை, திருப்பாச்சேத்தி, மாரநாடு, கொத்தங்குளம், கீழச்சொரிக்குளம், மேலச்சொரிக்குளம், முதுவன்திடல், டி.பாப்பான்குளம், பிரமனூர், பழையனூர், வயல்சேரி, கீழராங்கியம், மேலராங்கியம், அல்லிநகரம், கலியாந்தூர், மாங்குடி, அம்பலத்தாடி, மேலவெள்ளூர், பொட்டப்பாளையம், பாட்டம், கொந்தகை, கீழடி, மணலூர், மடப்புரம், பூவந்தி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை சிவகங்கை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சின்னையா தெரிவித்துள்ளார்.

இதேபோல் காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஸ்ரீராம்நகர், கோட்டையூர், வேலங்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகப்பட்டி, ஆவுடைப்பொய்கை ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.இந்த தகவலை காரைக்குடி உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். 

Next Story