கும்மிடிப்பூண்டி அருகே தீ விபத்து: 2 கடைகள், வீடு சேதம்
கும்மிடிப்பூண்டி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 2 கடைகள், வீடு சேதம் அடைந்தது.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த மா.பொ.சி. நகரை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 58). இவருக்கு கும்மிடிப்பூண்டியை அடுத்த பிரித்வி நகர் அருகே தேர்வழி கிராமத்திற்கு செல்லும் சாலை சந்திப்பில் காயலான் கடை உள்ளது. இங்கு பழைய இரும்பு பொருட்களுடன், பழைய பேப்பர், ரசாயனம் மற்றும் எண்ணெய்யுடன் கூடிய பேரல்கள் என பல்வேறு பொருட்கள் இருப்பில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று மதியம் 1½. மணியளவில் காயலான் கடையின் ஒரு பகுதியில் திடீரென தீ பிடிக்க தொடங்கியது.
சிறிது நேரத்தில் கடையில் இருந்த எண்ணெய் மற்றும் ரசாயன பேரல்கள் நாலாபுறமும் வெடித்து சிதறின. இதனால் அந்த பகுதி புகை மூட்டமானது. தகவலறிந்து கும்மிடிப்பூண்டி, சிப்காட் மற்றும் தேர்வாய் பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தால் மேற்கண்ட கடையின் அருகே உள்ள ரமேஷ் (47) என்பவரின் வீடும், தனசேகர் (33) என்பவருக்கு சொந்தமான கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடையும் சேதம் அடைந்தது.
கும்மிடிப்பூண்டி தாசில்தார் ராஜகோபால், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்த தீ விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story