திருவள்ளூர் மாவட்டத்தில் 2-ந்தேதி முதல் வருவாய் தீர்வாயம்: கலெக்டர் தகவல்


திருவள்ளூர் மாவட்டத்தில் 2-ந்தேதி முதல் வருவாய் தீர்வாயம்: கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 21 April 2018 3:45 AM IST (Updated: 21 April 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் வருகிற 2-ந்தேதி முதல் வருவாய் தீர்வாயம் நடைபெறும் என்று கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் 1,427-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 2-5-2018 முதல் அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை தவிர்த்து இதர நாட்களில் நடத்தப்படும்.

பள்ளிப்பட்டு பகுதியில் மாவட்ட கலெக்டர் தலைமையில் வருகிற மே மாதம் 2,3,4,8,9,10,11,15,16 ஆகிய நாட்களிலும், திருவள்ளூரில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன் தலைமையில் வருகிற மே மாதம் 2,3,4,8,9,10,11,15,16,17,18,22 ஆகிய நாட்களிலும், அம்பத்தூரில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சக்திவேல் தலைமையில் வருகிற மே மாதம் 2,3 ஆகிய நாட்களிலும், பூந்தமல்லியில் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ தலைமையில் வருகிற மே மாதம் 2,3,4,8,9 ஆகிய நாட்களிலும் நடைபெறும்.

கும்மிடிப்பூண்டியில் பொன்னேரி ஆர்.டி.ஓ. முத்துசாமி தலைமையில் வருகிற மே மாதம் 2,3,4,8,9,10,11 ஆகிய நாட்களிலும், திருத்தணியில் திருத்தணி ஆர்.டி.ஓ. ஜெயராமன் தலைமையில் வருகிற மே மாதம் 2,3,4,8,9,10,11,15,16 ஆகிய நாட்களிலும், மதுரவாயலில் அம்பத்தூர் ஆர்.டி.ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் வருகிற மே மாதம் 2,3,4 ஆகிய நாட்களிலும், பொன்னேரியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரூபன்தாஸ் தலைமையில் வருகிற மே மாதம் 2,3,4,8,9,10,11,15,16,17,18,22,23,24 ஆகிய நாட்களிலும், ஆவடியில் திருவள்ளூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் நாராயணன் தலைமையில் வருகிற 2,3,4,8,9 ஆகிய நாட்களிலும் நடைபெறும்.

மாதவரத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) மணிலா தலைமையில் வருகிற மே மாதம் 2,3,4,8 ஆகிய நாட்களிலும், ஊத்துக்கோட்டையில் கலால் உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையில் வருகிற மே மாதம் 2,3,4,8,9,10,11 ஆகிய நாட்களிலும், திருவொற்றியூரில் தனித்துணை கலெக்டர் ஜானகிராமன் தலைமையில் வருகிற மே மாதம் 2,3,4,8 ஆகிய நாட்களிலும் வருவாய் தீர்வாயம் நடைபெற உள்ளது.

தினமும் காலை 9 மணியளவில் அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் ஆரம்பிக்கப்படும். பட்டா நகல் கோரும் பட்டாதாரர்கள் வருவாய் தீர்வாயத்தில் மனு கொடுத்து பட்டா நகல் பெற்று கொள்ளலாம். பட்டா மாறுதல் மற்றும் பொதுமக்களின் இதர குறைகள் சம்பந்தமான மனுக்களும் பெற்றுக்கொள்ளப்படும். வருவாய்த்தீர்வாயம் முடிவு பெறும் கடைசி நாளன்று கூட்டம் நடத்தப்பட்டு வருவாய் தீர்வாயம் நடத்தும் அலுவலரால் பரிசீலனை செய்யப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story