திண்டிவனம்-நகரி அகல ரெயில் பாதை திட்டம்: நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்பு


திண்டிவனம்-நகரி அகல ரெயில் பாதை திட்டம்: நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்பு
x
தினத்தந்தி 20 April 2018 10:00 PM GMT (Updated: 20 April 2018 8:46 PM GMT)

திண்டிவனம்-நகரி அகல ரெயில் பாதை திட்டத்திற்காக நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா வழியாக திண்டிவனம்-நகரி புதிய அகல ரெயில் பாதை திட்டம் அமைய உள்ளது. இதற்காக பள்ளிப்பட்டு தாலுகாவை சேர்ந்த 16 கிராமங்களில் நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் மீசரகண்டாபுரம், பத்மாபுரம், வங்கனூர், ஆர்.கே.பேட்டை, விளக்கணாம்பூடி, அத்திமாஞ்சேரிப்பேட்டை ஆகிய கிராமங்களில் நில ஆய்வு முடிக்கப்பட்டு அந்த பகுதி நில உரிமையாளர்களின் கருத்து சேகரிக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பெருமாநெல்லூர் கிராமத்தை சேர்ந்த நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்தில் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சக்திவேல் (பொறுப்பு) தலைமை தாங்கினார். தென்னிந்திய ரெயில்வே முதுநிலை பொறியாளர் கிரிராஜன் முன்னிலை வகித்தார்.

இதில் திண்டிவனம்-நகரி புதிய அகல ரெயில் பாதை அமைய உள்ள நிலங்களின் உரிமையாளர்களிடம் அவர்களது சொந்த கருத்து எழுத்துப்பூர்வமாக எழுதி பெறப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிப்பட்டு தாசில்தார் தமிழ்செல்வி, வருவாய் ஆய்வாளர்கள் ஆறுமுகம், மதன், கிராமநிர்வாக அலுவலர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story